சாப்ட்வேர் முகத்திரையில் "ரியல் எஸ்டேட் ஜாம்பவான்"!! இன்போசிஸ் ஷிபுலால்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் ரியல் எஸ்டேட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் ஐடி நிறுவனங்கள், சுற்றுலா தளங்கள், மற்றும் தொழிற்கூடங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அதன் வளர்ச்சி அமோகமாக உள்ளதை மறுக்க முடியாது.

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சீஇஓவான ஷிபுலால் ரியல் எஸ்டேட் துறையின் மீது தீர ஆசை அல்லது வெறி கொண்டவராக உள்ளர். இவர் இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா போன்ற பொருளாதார வல்லமை மிக்க நாடுகளில் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்.

700 வீடுகள்

700 வீடுகள்

எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையின் தகவல் படி அமெரிக்காவின் சியாட்டில் மற்றும் பெல்லிவூ பகுதியில் சுமார் 700 அப்பார்ட்மென்ட் வீடுகளை வைத்துள்ளார். இந்த வீடுகளில் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் நடுத்திர மற்றும் உயர் அதிகாரிகள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

முதலீடு முறை

முதலீடு முறை

அப்பார்ட்மென்ட் வீடுகளில் முதலீடு செய்யும் பாதி பணம் ஷிபுலாலின் சொந்த முதலீட்டு நிறுவனமான Innovations Investment Management India Ltd என்ற தனது குடும்ப நிறுவனத்தின் பெயரில் முதலிடு செய்தவை.

காம்பிளக்ஸ்

காம்பிளக்ஸ்

மேலும் அமெரிக்காவில் 2 காம்பளக்ஸ்-களில் சுமார் 40 முதல் 50 வீடுகளை ஷிபுலால் வைத்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் ஜெர்மனியில் 50 அப்பார்ட்மென்டு வீடுகளும் வைத்துள்ளார்.

சீஇஓ பதவிக்கு
 

சீஇஓ பதவிக்கு "டாட்டா"

தற்போது இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய சீஇஓ கிடைத்த நிலையில் ஷிபுலால் வரும் ஜூலை 31ஆம் தேதி நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்து வெளியேறுகிறார்.

குடும்ப நிறுனம்

குடும்ப நிறுனம்

இவரது குடும்ப நிறுவனம் சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கித்து வருகிறது.

இந்தியாவில் ஷிபுலால்

இந்தியாவில் ஷிபுலால்

இந்தியாவில் ஷிபுலால் பல இடங்களில் ரியல் எஸ்டேட் துறையில் கால் உன்றியுள்ளார். இவைகளில் கர்நாடகாவின் கூர்கில் 170 ஏக்கரில் அமைக்கப்பட்ட தமாரா ரெசார்ட் குறிப்பிடதக்கது. மேலும் அடுத்தகட்டமாக திருவனந்தபுரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விருந்தோம்பல் துறை

விருந்தோம்பல் துறை

ஷிபுலால் ரியல் எஸ்டேட் துறை மட்டும் அல்லாமல் விருந்தோம்பல் துறையில் அவந்து கிரேட் விருந்தோம்பல் நிறுவனத்தில் 50 சதவீத பங்கை கைபற்றியுள்ளது.

விவசாயம்

விவசாயம்

மேலும் தமிழ்நாடு, கர்நாடக பகுதிகளில் 900 ஏக்கர் பரப்பளவில் காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் முதலீடு செய்யதுள்ளார் ஷிபுலால்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Story first published: Monday, June 23, 2014, 13:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X