திருட்டு சாப்ட்வேர் பயன்பாட்டினால் ரூ.210 கோடி நஷ்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: முறையான உரிமம் இல்லாத சாப்ட்வேர்களைப் பயன்படுத்துவதால், ஒரு சாதாரண இந்தியத் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்றுமதி தொழிலில் ரூ.210 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பயன்படுத்தப்படும் பல சாப்ட்வேர்களுக்கு முறையான உரிமம் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் சில தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நஷ்டத்தைவிட முறையான உரிமம் பெற்ற சாப்ட்வேர்களுக்காக செலவழிக்கும் தொகை மிகவும் குறைவுதான் என்றும் தெரிய வந்துள்ளது.

ஐடிசி ஆய்வு

ஐடிசி ஆய்வு

இது தொடர்பான ஒரு ஆய்வை ஐடிசி என்ற ஆய்வு நிறுவனம் இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, துருக்கி, மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் 600 பேரிடம் நடத்தியது. இதில் 42 சதவீதம் இந்தியர்கள், முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் ஏற்படும் ரிஸ்க் மிகவும் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

 790 பில்லியன் டாலர்கள் இழப்பு?

790 பில்லியன் டாலர்கள் இழப்பு?

சாப்ட்வேர்கள் தொடர்பான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால், இந்த 6 நாடுகளிலும் இந்த ஆண்டு 790 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு ஏற்றுமதி இழப்பு ஏற்படும் என்று ஐடிசி கண்டறிந்துள்ளது.

லைசென்ஸ் பெட்டர்

லைசென்ஸ் பெட்டர்

அதே நேரத்தில், உரிமம் பெறாத சாப்ட்வேர்களை பயன்படுத்துவது 10 சதவீதம் குறைந்தால், 1.6 பில்லியன் டாலர்களுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்றும், அடுத்த 4 ஆண்டுகளில் புதிதாக 15,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சீனாவைவிட இந்தியா பெட்டர்

சீனாவைவிட இந்தியா பெட்டர்

இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள் முறையான உரிமம் இல்லாத சாப்ட்வேர்களைப் பயன்படுத்துவதால் அதிக ரிஸ்க் எடுத்து வருகிறது. இருந்தாலும் சீனாவை விட ரிஸ்க் குறைவுதான் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடவடிக்கை

அமெரிக்கா நடவடிக்கை

இந்த உரிமம் இல்லாத சாப்ட்வேர்களை உபயோகிப்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருவதாக ஐடிசி கூறியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மற்றும் வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அந்தச் சட்டத்தின் கீழ், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் முறையான உரிமம் பெற்ற சாப்ட்வேர்கள் குறித்த தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், அந்த நிறுவனம் அனுப்பிய பொருட்கள் நிராகரிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pirated software may lead to $35 million export loss for manufacturing firms

A mid-sized manufacturing company in India could lose as much as US $35 million (about Rs 210 crore) in export revenue if it is using pirated (unlicensed) softwares as many states in the US look at implementing the Law Against Unfair Competition, research firm IDC said today. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X