ஐடி நிறுவனங்களை காலில் விழாத குறையாக அழைக்கும் சந்திரபாபு நாயடு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதெராபாத்: ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானவை பிரித்த பிறகு அந்திராவை சிறந்த தொழிற்நுட்ப மாநிலமாகவும், வருவாய் கொழிக்கும் மாநிலமாகவும் உருவாக்க அம்மாநிலத்தின் முதல் அமைச்சக் சந்திரபாபு நாயடு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஐடி, பீபிஒ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கும் தங்களது மாநிலங்களில் முதலீடு செய்யுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

தெலுங்கானவை பிரிக்கும் போது அந்திராவின் தலைநகரமான ஹைதெராபாத் தெலுங்கான பக்கம் சென்றது. அந்திராவில் வருவாய் அதிகம் தரும் பகுதிகளில் ஹைதெராபாத் முதன்மையானது. இங்கு ஐடி நிறுவனங்கள் முதல் ஐஐடி கல்லூரி வரை அனைத்தும் இங்கு தான் உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

ஏற்கனவே சந்திரபாபு நாயடு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரான வைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓ சத்ய நாதெல்லாவிடம் தங்களது நிறுவனத்தை ஆந்திராவில் மையமாக வைத்து செயல்படுத்தும் படி கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர மாநிலம்

ஆந்திர மாநிலம்

இந்த கடிதத்தில், ஆந்திராவில் அனைத்து விதமான வாய்ப்புகளும் அமைந்துள்ள இந்தியாவின் புதிய மாநிலம் என்றும், குறிப்பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏது ஏற்றுமதி செய்ய வசதியாக வாசகாப்பட்டனம் உள்ளதாகவும் சந்திரபாபு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வருவாய்

வருவாய்

கடந்த வருடம் இரு மாநிலங்களும் ஒன்றாக இருந்த போது இம்மாநிலத்தின் வருவாய் 64,354 கோடியாக இருந்து, இதில் பெரும் பகுதி ஹைதெராபாதில் இருந்து மட்டுமே வந்தது. தற்போது இருக்கும் ஆந்திராவின் வருவாய் வெறும் 1,629 கோடி மட்டுமே.

ஐடி பார்க்
 

ஐடி பார்க்

மாநிலத்தை வளர்க்க சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் ஐடி நிறுவனங்களை அமைக்க திட்டம் தீட்டியுள்ளது ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதில் நிறுவனங்களை திறக்கும் அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான சலுகைகள் மற்றும் நிலங்களை தரவும் ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

வர்த்தக தலைநகரங்கள்

வர்த்தக தலைநகரங்கள்

இந்த நிலையில் ஆந்திர அரசு 5 இடங்களை மையமாக வைத்து வர்த்தக திட்டங்களை அமைத்து வருகிறது. அவை விசாகப்பட்டணம், காக்கிநாடா, விஜயவாடா-குன்டூர், திருப்பதி மற்றும் அனந்தபூர் ஆகியவை ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chandrababu invites global IT majors

Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu has sent letters to the chief executives of IT, BPO and electronics majors in the US and other Western countries, inviting them to invest in the State.
Story first published: Wednesday, July 2, 2014, 17:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X