சீன சந்தைக்குள் நுழையும் உம்மிடி பங்காரு ஜீவல்லர்ஸ்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய நகைக்கடை குழுமங்களில் ஒன்றாக இருக்கும் உம்மிட பங்காரு ஜீவல்லர்ஸ் நிறுவனத்தின் மின்-வணிகத் துறையினர், சீன சந்தையில் கால் பதிக்கும் எண்ணத்துடன் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

இந்தியாவை விட வேகமாக வளர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் சீன சந்தையில் காலூன்ற, VBJ-வில் தொடங்கப்பட இருக்கும் மின்-வணிகத் துறை (இ-காமர்ஸ்) உதவியாக இருக்கும் என்று இந்த குழுமத்தின் வாரிசான திரு.அமரேந்திரா உம்மிடி, வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

100 ஆண்டுகள்

100 ஆண்டுகள்

100 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம் மற்றும் நகை வியாபாரம் செய்து வரும் குழுமத்திலிருந்த தன்னுடைய சகோதரரிடமிருந்து, ஆன்லைன் சில்லறை வர்த்தக திட்டங்களை கடந்த மாதம் பிரித்து ஸா அமோரிஸ் (Za Amoris) என்ற இணைய தளத்தை துவங்கியிருக்கிறார், திரு.அமரேந்திரா.

வெளிநாட்டு வாடிக்கையாளர்

வெளிநாட்டு வாடிக்கையாளர்

ஸா அமோரிஸ், VBJ-ன் இணைய தளத்திலிருந்து முழுமையாக பிரிக்கப்பட்டு, வெளிநாட்டிலிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை கவனிக்கும் புள்ளியாக இருக்கும்.

ரூ.100 கோடி வர்த்தக இலக்கு
 

ரூ.100 கோடி வர்த்தக இலக்கு

'உயர்-குடி வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பிறவில் இருக்கும் மணமகள் நகைகளுக்கு புகழ் பெற்றதாக VBJ உள்ளது. ஆனால், ஸா அமோர் முற்றிலும் மாறுபட்டது. ரூ.1 இலட்சத்திற்கும் அதிகமாக வாங்குவதற்கான வாய்ப்புகள் இங்குள்ளன. மூன்று ஆண்டுகளில் ரூ.100 கோடி அளவை (விற்பனையில்) நாங்கள் தொட்டு விடுவோம் என்று நம்புகிறோம்,' என்று செய்தி தொடர்பாளரிடம் அவர் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.

சில்லறை வணிகம்

சில்லறை வணிகம்

'எங்களால் விலை மாற்றத்திற்கேற்றவாறும் விற்பனை செய்ய முடிகிறது. இந்த விலை மாற்றத்தில் பெருமளவு 6-8 சதவீதமாக இருக்கும் என்பதால், எங்களால் செலவை சேமிக்க முடிகிறது. அதே போல, சில்லறை விற்பனை நிலையங்கள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டும், காப்பீடு செய்யப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் உள்ளன...,' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சீன சந்தை

சீன சந்தை

சீன சந்தையில் நுழைவதற்கான கருவியாக ஸா அமோர் இருக்கும் என்றும் திரு.அமரேந்திரா நம்புகிறார். சீன சந்தையில் நேரடியாக சில்லறை வர்த்தக வழியில் நுழைவது மிகவும் கடினமானது, என்கிறார் இந்த VBJ நிறுவனத்தின் வாரிசு.

வியாபார யூக்தி

வியாபார யூக்தி

'சில்லறை விற்பனை கடைகளைப் பொறுத்த வரையில் சீனாவிற்கென பல சொந்த விஷயங்கள் உள்ளன. ஆனால், ஆடம்பர சந்தையைப் பொறுத்த வரையில், இந்தியாவை விட பெரியதாக (சிறந்ததாக) உள்ளது. (இந்திய நிறுவனத்திடமிருந்து வாங்குகிறோம் என்ற எண்ணமே வராத வகையில்) நாங்கள் ஸா அமோரை முழுமையாக சீன மொழியில் உருவாக்குவோம். எங்களுடைய இந்தியா அமைப்பை சரியாக செய்து முடித்தவுடன், சீனா மற்றும் அமெரிக்காவின் பக்கம் கவனம் செலத்துவோம்,' என்கிறார் அவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

VBJ e-commerce venture sets eyes on China foray

Vummidi Bangaru Jewellers (VBJ) scion Amarendra Vummidi, on Friday, said that company’s new e-commerce venture would serve as the vehicle for an eventual foray into China, a market whose margins far outstrip that of India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X