3 மணி நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய மும்பை பங்கு சந்தை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மும்பை பங்கு சந்தையில் இன்று அனைத்து வதிமான வர்த்தகம் முடங்கியது. வியாழக்கிழமை காலையில் நெட்வொர்க் பிரச்சனையால் பங்கு சந்தையில் முற்றிலும் செயலிழந்தது, இதனால் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் திகைத்தனர்.

இப்பிரச்சனையை நெட்வொர்க் சேவையை அளிக்கும் எச்.சி.எல் நிறுவனம் சரி செய்ய இறங்கியுள்ளதாக முதலீட்டு நிறுவனங்கள் தெரிவித்து. இந்நிலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு 12.40 மணியளவில் மும்பை பங்கு சந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது, துவக்கத்தில் 25811 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் துவங்கியது குறிப்பிடதக்கது.

திடீர் முடக்கம்

திடீர் முடக்கம்

முன்கூட்டிய அறிவிப்பு எதும் இல்லாமல் பங்கு சந்தை முடங்கியதால் தினசரி வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளனர். ஆனால் தேசிய பங்கு சந்தையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

வர்த்தகம்

வர்த்தகம்

இன்று காலை நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 87.05 புள்ளிகள் உயர்ந்துள்ளது. நிப்டி வெறும் புள்ளிகள் உயர்ந்து 7,733 புள்ளிகளை எட்டியுள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தையின் இந்த முடக்கம் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத நிலையை காட்டுகிறது, மேலும் இந்திய பட்ஜெட் 2014 எதிர் நோக்கி செயல்படும் இவ்வேலையில் இந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என பங்கு சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

இந்தியாவின் பழைமையான பங்கு சந்தை நிறுவனமான மும்பை பங்கு சந்தை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இது இரண்டாவது முறையாக முடங்கியுள்ளது. கடந்த வருடம் ஜூன் 11ஆம் தேதி சுமார் 20 நிமிடங்கள் முடங்கியது குறிப்பிடதக்கது. ஆனால் இப்போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் இந்திய

வளர்ந்து வரும் இந்திய

இந்திய போன்று வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கும் தொழிற்நுட்பத்தின் குறைந்த வளர்ச்சி ஒரு தடைகல் என்றே சொல்லலாம்.

புதிய சாப்ட்வேர்

புதிய சாப்ட்வேர்

மும்பை பங்கு சந்தையில் 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் போல்டு என்ற புதிய தளத்தை மும்பை பங்கு சந்தை நிறுவியது. இதனால் பங்கு சந்தையின செயல்பாடு மிகவும் வேகமாக இருந்தது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Network outage at BSE; all market operations closed

The Bombay Stock Exchange has closed all market operations on early Thursday due to network outage, leaving traders and arbitrageurs stranded. Network service vendor HCL's team is working to resolve the issue, according to broking sources.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X