கூகுள் நிறுவனத்தின் வருவாய் 22% உயர்வு!! நிக்கேஷ் அரோரா வெளியேறினார்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: 2014ஆம் நிதியாண்டின் நடப்பு காலாண்டில் கூகிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை சுமார் 16 பில்லியன் டாவர் வரை உயர்ந்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்திள்ளது.

அதிகப்படியான வருவாய் இந்நிறுவனம் பெற்று வருவதால் இந்நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்புகளான தானியங்கி கார்கள் மற்றும் அதிக வேக இண்டர்நெட் போன்றவற்றில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. இத்தகைய முயற்சியின் மூலம் இந்நிறுவனம் பல புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து செய்து வருகிறது.

எதிர்பார்ப்பை தவறவிட்டது..

எதிர்பார்ப்பை தவறவிட்டது..

ஆயிரம் செய்தாலும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு எதிர்பார்த்த லாபமான 6.25 டாலரை விட 6.08 டாலரை மட்டுமே அளித்துள்ளது. கூகுள் மிகவும் சிறப்பான காலாண்டை சந்தித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சீஎஃப்ஒ பெட்ரிக் தெரிவித்துள்ளார்.

இந்தியன் வெளியேறுகிறார்...

இந்தியன் வெளியேறுகிறார்...

இந்த காலாண்டு முடிவுகளை வெளியிடும் கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் நீண்ட காலமாக பணியாற்றி வந்த நிக்கேஸ் அரோரா நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார் என அறிவிக்கப்பட்டது. நிக்கேஷ் அரோரா கூகுள் நிறுவனத்தை விட்டு சாப்ட்பாங்கு நிறுவனத்தின் துணை தலைவராக சேர உள்ளார்.

வருவாய்

வருவாய்

கூகுள் இணையதளத்தில் இருந்து இதன் வருவாய் 23 சதவீதம் உயர்ந்து 10.94 பில்லியந் டாலர் உயர்ந்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் நெட்வொர்க் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் 7 சதவீதம் உயர்ந்து 3.42 பில்லியன் டாலராக உள்ளது.

 தொழிற்பாட்டுச் செலவு

தொழிற்பாட்டுச் செலவு

இந்நிறுவனத்தின் தொழிற்பாட்டுச் செலவுகள் 4.45 பில்லியன் டாலரில் இருந்து 5.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும் இந்த காலாண்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

மார்ச் 31ஆம் தேதியின் படி இந்நிறுவனத்தின் மொத்த பணியாள்களின் எண்ணிக்கை 48,829இல் இருந்து 52,069 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google revenues grow 22% to $16 bn

Google reported a 22 per cent rise in second quarter revenues on Thursday, with sales reaching $16 billion.
Story first published: Friday, July 18, 2014, 12:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X