இந்தியாவில் ஐபோன், ஐபேட் விற்பனை 45% உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா உட்பட வளர்ந்து வரும் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் என அதன் தயாரிப்புகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது அமெரிக்கா, பிரிட்டன், சீன மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டும் தான் இருந்தது.

 

ஆனால் இப்போது இந்த நிலை மாறி ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை பல நாடுகளில் சிறப்பாக உள்ளது குறிப்பாக இந்தியாவில்.

(Read this:6 ways Budget 2014 has helped the senior citizens in India)

இந்தியாவில் அமோகம்

இந்தியாவில் அமோகம்

இந்தியாவில் ஆப்பிள் பொருட்களை ஒரு ஆடம்பர பொருளாக மட்டுமே இன்றளவும் பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் அவர்களது பண பலத்தை காட்டவும், கவுரவத்தை எடுத்துக்காட்டவும் மட்டுமே இதை வாங்குகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் ஐபேட் விற்பனை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 45 சதவீத வளரச்சியை சந்தித்துள்ளது. அதேசமயம் மேலை நாடுகளில் இதன் விற்பனை குறைந்தது குறிப்பிடதக்கது.

ஐபேட்-இன் ஆதிக்கம்

ஐபேட்-இன் ஆதிக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஐபேடின் விற்பனை சுமாப் 64 சதவிதம் உயர்வை சந்தித்துள்ளது, அதேபோல் சீனாவில் 51 சதவீத வளர்ச்சியும், அடுத்தாக இந்தியாவில் 45 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான லூக்கா மேஸ்ட்ரி தெரிவித்தார்.

இந்தியாவில் தோல்வி
 

இந்தியாவில் தோல்வி

கடந்த 2 வருடமாக இந்தியாவின் விற்பனை இலக்கை ஆப்பிள் நிறுவனத்தால் சந்திக்க முடியவில்லை. ஆனால் இந்த வருடம் சில பல விற்பனை சூத்திரங்களால் இதன் விற்பனை இலக்கை விட 20 சதவீதம் அதிகமான விற்பனை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. (பாவம் மக்கள்..)

ஐபோன்

ஐபோன்

மேலும் பிரிக்ஸ் நாடுகளில் அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளில் ஐபோன் நிறுவனத்தின் விற்பனை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஐபோன் நிறுவனத்தின் பழைய மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக டிம் குக் தெரிவித்தார். (ஏன்னா அதுதான் கம்மியான விலைல கிடைக்குது...)

விலை குறைவான தயாரிப்புகள்

விலை குறைவான தயாரிப்புகள்

பிரிக்ஸ் நாடுகளில் விலை குறைவான பொருட்களின் விற்பனை மட்டுமே அதிகளவில் உள்ளது. மேலும் மக்கள் ஆப்பிள் நிறுவனத்தின் டெக்னாலஜியை சுவைத்த பிறகு இன்னும் 2 வருடங்களில் இந்நிறுவனத்தின் உண்மையான விற்பனை தெரிய வரும் என டிம் குக் தெரிவித்தார்.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் வடிவமைத்து இருக்கும் புதிய தலைமை அலுவலகம், அது அவருடைய கனவு. மேலும் இந்த புதிய அலுவலகத்திற்கான பணி அதிவேகமாக நடந்து வருகிறது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

iPad, iPhone sales jump in India

India and other developing countries proved to be a bright spot for Apple yet again, with CEO Tim Cook disclosing on Wednesday that iPhone and iPad sales grew strongly in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X