வாரத்தில் 3 நாள் வேலை, 4 நாள் லீவ்!! சூப்பர் ஐடியா.. ஆனால் இந்தியாவுக்கு சரிவராதாம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் முன்னணி தொழில் வல்லுநர்களான கார்லோஸ் ஸ்லிம்மும், ரிச்சார்ட் ப்ரான்சன்னும் தங்கள் பணியாளர்களின் பணியின் தரத்தை அதிகரிக்க வாராத்துக்கு மூன்று நாட்கள் வேலை செய்தால் போதும் என்று குறிப்பிடுகின்றனர்.

 

ஆனால் இந்தியாவை பொருத்த வரை இந்த லாஜிக் சரிப்பட்டு வராது என பல மனித வள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் "இந்த செயல் திட்டம் அவர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இத்திட்டம் சிறிதும் பொருந்ததாது" என்று தெரிவித்தனர்.

பிசினஸ் மேக்னெட்

பிசினஸ் மேக்னெட்

மெக்ஸிகோவின் கோடீஸ்வரர் ஸ்லிம்மும், பிரிட்டிஷ் தொழிலதிபர் ப்ரான்சன்னும் இந்த மூன்று நாள் வேலை கோரிக்கையை வலியுறுத்துபவர்களில் முக்கிய மனிதர்களாக உள்ளனர்.

செயல் திட்டம்

செயல் திட்டம்

இத்திட்டத்தின் படி பணியாளர்கள், ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வீதம் மூன்று நாட்கள் வேலை செய்தால் போதும். அதன் பிறகு நான்காம் நாள் முதல் ஒரு பெரிய நான்கு நாள் விடுமுறையை வாரத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

இதை முன்வைப்பவர்கள், இந்த முறையில் தொடர்ந்த மற்றும் மூன்று நாள் பணி மூலமாக பணியாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இயலும் எனவும் அது ஒரு வாரத்திற்கு வேலையை பரவிச் செய்வதை விட எளிது என்றும் நம்புகின்றனர்.

இந்தியாவில்...??
 

இந்தியாவில்...??

எனினும், இந்தியாவில் உள்ள வல்லுநர்கள் இங்கு இது சாத்தியமில்லை என்றும் பெரும்பாலான வேலைகளில் இதைச் செய்ய இயலாது எனவும் நம்புகின்றனர்.

ஓட்ட பந்தயம்

ஓட்ட பந்தயம்

"இந்த பதினோறு மணி நேர வேலை முறையானது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் போன்ற ஒன்று என்பதால் அது ஒரு சில தொழில்கள் அல்லது வேலைகளுக்கே பொருந்தும். உதாரணமாக, வாடிக்கையாளர் சேவை, சில்லரை வணிகம், பொழுதுபோக்கு மற்றும் உடல்நலம் போன்றவற்றில் இது சாத்தியமில்லை" என சாப் லாப்ஸ் நிறுவன மனிதவளத் துறைத் தலைவர் ஷிவராம் தெரிவித்தார்.

வளரும் நாடுகள்

வளரும் நாடுகள்

"உற்பத்தித் திறன் முக்கியத்துவம் பெற்றுள்ள வளரும் நாடுகளில், வேலைவாய்ப்பு அவசியமான ஒன்று என்பதால், இந்த முறை சரியாகப் பொருந்தாது" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய உற்பத்தி திறன்

இந்திய உற்பத்தி திறன்

"இந்தியாவில் நாம் உற்பத்தித் திறனில் சற்று பின்தங்கியுள்ளதால் இந்த மூன்று நாள் வேலைத் திட்டம் அதை மேலும் பாதிக்கும். தற்போதுள்ள 5 முதல் 6 வேலை நாட்கள் முறையிலும், வளர்ந்த நாடுகளில் 3 நாட்களில் செய்யக்கூடிய அதே அளவு வேலை மட்டுமே நடக்கிறது" என மேலும் அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Not Ready For Three Day Working Week

World’s top billionaire business leaders like Carlos Slim and Richard Branson may be advocating for 3-day working week to boost employee productivity, but HR experts believe India is not ready for such a model.
Story first published: Wednesday, August 6, 2014, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X