இந்தியாவில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் 100 புதிய விமான நிலையங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்தியாவின் முன்னணி விமான நிலையங்களுக்கும் இணையாக, புதிய மலிவு விலை விமான நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்ட அறிக்கையை ஏர்போர்ட் அத்தாரட்டி ஆஃப் இந்தியா செப்டம்பர் மாத மத்தியில் அறிவிக்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 வருடத்தில் இந்தியாவில் சுற்றுலா மற்றும் வியாபார நோக்குடன் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் நகரங்கள் அல்லது மாநிலங்களில் அதுவரை விமான சேவை பெறப்படாத இடங்களாக இருக்கும் எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்டம்

100 நாள் வேலை திட்டம்

இந்தியாவில் 100 மலிவு விலை விமான நிலையங்களை அமைக்கப்படும் பணியில் 100 நாள் வேலை திட்டதை செயல்படுத்த உள்ளோம், மேலும் அதற்கான பணிகளை சில இடங்களில் நடந்து வருகிறது. இத்தகைய விமான நிலையங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் பல புதிய வியாபார தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை உருவாக வான் வழி பயணம் வழிவகுக்கும் என் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலிவு விலை

மலிவு விலை

விமான நிலையங்கள் அமைக்கும் பணியில் மட்டும் மலிவு விலை இல்லை, விமான சேவை கட்டணத்திலும் மலிவு விலையை அறிவிக்கப்படும். மேலும் குறைந்த கட்டணத்தின் காரணமாக இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும். இதன் மூலம் விமானத்துறை சிறப்பாக செயல்படும். மேலும் இத்திட்ட துவக்கத்தில் விமான லேன்டிங் கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் பயணிகள் கட்டணங்கள் ஆகியவை விதிக்கப்படமாட்டாது.

மாநில அரசின் உதவி
 

மாநில அரசின் உதவி

இந்த மலிவு விலை விமான நிலையங்கள் அமைக்கப்படும் பணியில் மாநில அரசின் தலையீடு இருக்கும். மேலும் ஏர்போர்ட் அத்தாரட்டி ஆஃப் இந்தியா இதற்கான கொள்கையை வகுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.

பட்ஜெட்

பட்ஜெட்

ஒரு விமான நிலையம் அமைக்க வெறும் 90 - 110 கோடி வரை மட்டுமே நிதி ஒதுக்குப்பட்டுள்ளது. இத்தொகை சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை (2000 கோடி ரூபாய்) விட மிகவும் குறைவாது என்பது குறிப்பிதக்கது

ரன்-வே

ரன்-வே

இந்த விமான நிலையங்களில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிரீன்ஃபீல்டு ரன்-வே அமைக்கப்படும். இந்த ஓடுபாதை 20 இருக்கை முதல் 60 இருக்கைகள் கொண்ட விமானங்கள் தரையிறக்கும் வசதிக்கும் ஏற்றாற் போல் அமைக்கப்படும்.

விஐபி அறைகள்

விஐபி அறைகள்

சில விமான நிலையங்களில் விஜபி அறைகளும் அமைக்கப்படும் எனவும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இத்தகைய திட்டங்களின் மூலம் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் வர்த்தக ரீதியில் விரைவாக முன்னேற்றம் அடையும். அதைவிட முக்கியமாக பொருளாதார நிலை உயரும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aviation ministry set to announce Rs 10,000-cr no-frills airport plan

The civil aviation ministry has firmed up a Rs 10,000 crore plan for low-cost "no frills" airports, for which a formal policy drafted by the Airports Authority of India (AAI) will be announced by mid-September. For the next three years, around 100 airports are being identified for regions with potential for tourism or business where no air connectivity exists today.
Story first published: Friday, August 8, 2014, 16:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X