இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.62ஆக குறையும்!! பாதிப்புக்குள்ளாகும் பத்திர சந்தை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக சந்தையின் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்த வாரம் இறுதிக்குள் இந்திய ரூபாயின் மதிப்பு 62 ரூபாய் என்ற அளவில் குறையும் என நிதியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ரூபாய் மதிப்பு குறைந்தால் இந்திய அரசின் பத்திர சந்தை கண்டிப்பாக பாதிக்கும். ஆனால் இம்முறை இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் நாணய சந்தையில் ஈடுப்படுபவர்கள் இந்த வாரம் ரூபாய் மதிப்பு 61.50 ரூபாய் முதல் 62 ரூபாய் வரை குறையும் என அன்னிய செலவாணி சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கும் எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.20 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது

(READ: 6 extra financial benefits that senior citizens receive in India)

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாணய சந்தையின் வர்த்தக முடிவில் இந்திய ரூபாய் மதிப்பு 61.15 ரூபாய் என்ற நிலையில் முடிவடைந்தது. ஆனால் அதே நாளில் இதன் மதிப்பு 61.74 ரூபாய் வரை குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் அளவீடு கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று நடந்த வர்த்தகத்தை ஒத்துஇருக்கிறது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

மேலும் 10 வருட அரசு முதலீட்டு பத்திரங்களில் 8.68 சதவீதம் அளவில் லாபம் உயர்ந்தது, இதற்கு முந்தைய வர்த்தகத்தில் இதன் வர்த்தகம் 8.64 சதவீதம் மட்டும் இருந்து குறிப்பிடதக்கது. ரூபாய் மதிப்பின் பலவீனத்தால் இதன் வருவாய், இந்த வார இறுதியில் 8.70 சதவீதம் வரை உயர்வும் என தனியார் வங்கி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

நாட்டில் நிலவும் பணவீக்கம் ரூபாய் மதிப்பில் அதிகப்படியாக பாதித்துள்ளது. கடந்த மே மாதம் 8.28 சதவீதமாக இருந்த வாடிக்கையாளர் விலை குறியீடு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.31 சதவீதமாக குறைந்ததுள்ளது.

ரூபாய் மதிப்பு குறைந்தால் என்ன??

ரூபாய் மதிப்பு குறைந்தால் என்ன??

ரூபாய் மதிப்பு குறைந்தால் நாம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான மதிப்பை அதிகப்படியான விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும் இதனால் டாலர் இருக்கும் நாட்டில் கணிசமாக குறையும். இதனால் அனைத்து துறையிலும் விலைவாசி அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee might touch 62 this week

The rupee might weaken this week due to global uncertainties. The government bond market shall keep a close watch on the inflation numbers for July to be released this week. However, if the rupee weakens, it shall also have a negative impact on the bond market.
Story first published: Monday, August 11, 2014, 17:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X