சாம்சங் நிறுவனத்தை ஒரம் கட்டிய ஜியோமி!! பரபரக்கும் விற்பனையில்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: மேற்கத்திய நாடுகளில் அதிக பிரபலம் ஆகாத மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி இத்துறை ஜாம்பாவானான சாம்சங் நிறுவனத்தை ஓரங்கட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டு இந்நிறுவனம் சீன மொபைல் விற்பனையில், சாம்சங் நிறுவனத்தை விட அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்தது. ஜியோமி பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது மொபைல்களை விற்பனை கலக்கலாக துவங்கியது. இம்முயற்சி மொபைல் விற்பனை நிறுவனங்களிடத்தில் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. 2 நொடிக்கு ஒரு மொபைல் என்ற கணக்கில் விற்பனை செய்துள்ளது பிளிப்கார்ட்.

(READ: 6 reasons to buy Gold ETFs in place of physical gold)

15 மில்லியன் ஸ்மார்ட்போன்

15 மில்லியன் ஸ்மார்ட்போன்

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சந்தை ஆய்வு நிறுவனமான கேணலிஸ்-ன் கூற்றுப்படி ஜியோமி நிறுவனம் ஏப்ரல்-ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் 15 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கிறது.

சாம்சங்.. லெனோவோ.. ஹவாய்..

சாம்சங்.. லெனோவோ.. ஹவாய்..

ஜியோமி சீனாவில், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருந்து வந்த சாம்சங், மற்றம் பிற உள்ளூர் நிறுவனங்களான லெனோவோ மற்றும் ஹவாய் ஆகியவற்றை முந்தி விற்பனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சாம்சங் விற்பனை சரிவு..

சாம்சங் விற்பனை சரிவு..

ஏப்ரல்-ஜூன் மாத காலங்களில் சீனாவில் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை 15.5 மில்லியன் போன்களில் இருந்து 13.2 மில்லியனாக குறைந்துள்ளது. லெனோவோ, சாம்சங் நிறுவனத்தை விட விற்பனையில் பின்தங்கியுள்ளது.

சீனா மட்டும் போதுமானது...

சீனா மட்டும் போதுமானது...

ஜியோமி நிறுவனம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் குறைந்த அளவே அறியப்பட்டுள்ளது, ஏனெனில் இந்நிறுவனம் தனது அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்புகளையும் சீனாவிலேயே விற்க முனைகிறது. ஆனால் சீனாவில் பெறுகின்ற வலிமையான' வளர்ச்சியே, உலகின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே முதல் ஐந்து இடங்களுக்கான பட்டியலில் இடம் பிடிக்க போதுமானதாக விளங்குகிறது.

எல்.ஜி காலி...

எல்.ஜி காலி...

சென்ற வாரம் மற்றொரு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்ட்ராடேஜி அனாலிட்டிக்ஸ், ஜியோமி எல்ஜி நிறுவனத்தின் விற்பனையை முந்தி இரண்டாவது காலாண்டில், உலகின் ஐந்தாவது முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளராக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது

10ல் 4 இங்க தாங்க...

10ல் 4 இங்க தாங்க...

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவே உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக விளங்கியது என்றும். உலகின் 10 ஸ்மார்ட்போன்களில் 4 ஸ்மார்ட்போன்கள் சீனாவில் விற்பனையானதாக கேணலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi overtakes Samsung as top seller in Chinese smartphone market

Xiaomi, a Chinese handset maker little known in the West, overtook tech giant Samsung Electronics Co. to become China's top-selling smartphone brand in the second quarter, a market research company said Tuesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X