புதிய சந்தைகளை கைப்பற்ற துடிக்கும் ராயல் என்ஃபீல்ட்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் உலகில் புதிதாக வளர்ந்து வரும் சந்தைகளில் கால்பதிக்க எண்ணியுள்ளது இதன் ஒருகட்டமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய சந்தைகளில் நுழைய திட்டமிட்டுள்ளது.

 

புதிய சந்தைகளை கைப்பற்ற துடிக்கும் ராயல் என்ஃபீல்ட்!!

புல்லட், தண்டர்பேர்ட்

புல்லட், க்ளாசிக், தண்டர்பேர்ட் மற்றும் காண்டினென்டல் ஜிடி போன்ற பிரபலமான பைக்குகளை தயாரிக்கும் சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள தன் இரண்டு தொழிற்சாலைகளின் மூலம் நடப்பாண்டு இறுதிக்குள் தன் உற்பத்தித் திறனை நான்கு லட்சம் யூனிட்டுகள் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

புதிய சந்தைகள்

"வளர்ந்த சந்தைகளில் வர்த்தகத்தை நிலைநிறுத்தியதுடன், நாங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வளர்ந்து வரும் புதிய சந்தைகளிலும் விரிவுபடுத்தவுள்ளோம். இதற்காக லத்தீன் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய சந்தைகளில் கவனம் செலுத்துகின்றோம்" என எய்ஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனரும் தலைமை அதிகாரியுமான சித்தார்த லால் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

முக்கிய சந்தைகள்

இந்த நிறுவனம், ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் தன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது என்றும் கொலம்பியாவில் புதிதாக ஒரு விநியோகிப்பாளரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேவையை நிரப்புவதே குறிக்கோள்

மேலும் அவர் கூறுகையில், "லத்தீன் அமெரிக்காவின் சந்தை பெரும்பாலும் முழுவதுமாக அடைய நினைப்பது சாத்தியமில்லாத ஒன்று. எங்கள் குறிக்கோள் நடுத்தர ரக பைக்குகளுக்கான தேவையிலுள்ள இடைவெளியை நிரப்புவதுதான்" என லால் தெரிவித்தார்.

நிறுவன விரிவாக்கம்

இந்த நிறுவனம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் புதிய உலகளாவிய வர்த்தகத் தளங்களை உருவாக்குதல் ஆகிய முயற்ச்சிகளில் முதலீடு செய்யவுள்ளது.

விற்பனை

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 2013 ஆம் ஆண்டில், சுமார் ஒரு லட்சத்து எழுபத்தெடாயிரம் பைக்குகளை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bike பைக்
English summary

Royal Enfield plans to thunder into Latin America, South East Asia

Royal Enfield, the motorcycle division of Eicher Motors, is looking to enter new markets in Latin America and South East Asia in the next three years as it seeks to expand its presence in the emerging markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X