சம்பளத்தில் தனியார் துறை நிறுவனங்களை ஒப்பிடும் அரசு அதிகாரிகள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியின் தலைவர் ரூ.50 இலட்சம் லஞ்ச வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார், அவரை தொடர்ந்து புஷன் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இவ்வழக்கின் தொடர்பில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையின் துவங்கிய நிலையில், பொது துறை வங்கி மற்றும் தனியார் துறை வங்கியாளர்கள் மத்தியில் இருக்கும் ஊதி வித்தியாசத்தை மிகப்பெரிய குறையாக கருதப்படுகிறது.

இந்திய வங்கி துறையில் இருக்கும் தனியார் துறை வங்கியின், உயர் அதிகாரிக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் சில சதவீதம் மட்டுமே பொது துறை வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தகைய வித்தியாசம் இத்துறை அதிகாரிகளை தவறான வழியில் பணத்தை சம்பாதிக்கும் சாத்தியக்கூறுகளை தேட வைக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

(READ: 8 documents you must check before buying property in India)

ஐசிஐசிஐ வங்கி vs பொது துறை வங்கிகள்

ஐசிஐசிஐ வங்கி vs பொது துறை வங்கிகள்

வித்தியாசம்.. வித்தியாசம்.. என கூறும் போது அப்படி என்ன வித்தியாசம் என கேள்வி கண்டிப்பாக எழும். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் அவர்களுக்கும் ஆண்டு வருமான 5 கோடி ரூபாய். ஆனால் பொது துறை வங்கி உயர் அதிகாரிகளுக்கும் வெறும் 20-30 இலட்சத்தில் தான் உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி அவர்களின் சம்பளம் பெறும் ரூ.19 இலட்சம் மட்டுமே. இதுவே அந்த வித்தியாசம்...

ஹெச்.டி.எஃப்.சி

ஹெச்.டி.எஃப்.சி

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவர் அதித்யா பூரி அவர்களின் சம்பளம் 6 கோடி, ஆனால் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைவர் எஸ்.எஸ். முத்திரா அவர்களின் சம்பளம் அதித்யா பூரி அவர்களின் சம்பளத்தில் வெறும் 4 சதவீதம் தான் (ரூ.26 இலட்சம்). இத்தகைய பெரும் வித்தியாசம் தான் பொது துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளை தவறு செய்ய துண்டுதலாக உள்ளதோ என கேள்வி எழுந்துள்ளது.

வங்கி துறை மட்டும் அல்ல...

வங்கி துறை மட்டும் அல்ல...

இந்த நிலைமை வங்கித்துறையில் மட்டும் அல்லாது, பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்களிலும் உள்ளது. உதாரணமாக என்.டி.பி.சி நிறுவனத்தின் தலைவர் அருப் சவுத்ரி அவர்களின் சம்பளம் ரூ.52 இலட்சம் என்றால் டாடா பவர் நிறுவனத்தின் தலைவர் அனில் சார்தனா அவர்களுக்கு ரூ.4.4 கோடி வருடாந்திர ஊதியம்.

இதர சலுகைகள்

இதர சலுகைகள்

தனியார் நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தை அளித்தாலும், சில நிறுவனங்கள் நிறுவன வளர்ச்சியை கருத்தி கொண்டு உயர் அதிகாரிகளுக்கும் நிறுவனத்தின் சில பங்குகளும் அளிக்கிறது. ஆனால் இவர்களுக்கும் அரசு அதிகாரிகள் போல் ஒய்வுதியம், வீட்டு வசதிகள் கிடைப்பதில்லை என்றால் ஊதியத்தில் அதிகப்படியான வித்தியாசம் உள்ளதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

வித்தியாசம் = வளர்ச்சி

வித்தியாசம் = வளர்ச்சி

இந்த வித்தியாசம் நிறுவனத்தின் வளர்ச்சியில் பாதிக்குமா என்றால் கண்டிப்பாக பாதிக்கிறது. குறிப்பாக மனித சக்தியும், மனித ஆற்றல் அதிகம் தேவைப்படும் இடத்தில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

நிறுவன ஊழியர்கள்

நிறுவன ஊழியர்கள்

பொதுவாக தனியார் துறைகளில் பணியாளர்கள் சம்பளத்திற்காகவும், வேளை நிமித்தமாகவு தொடர்ந்து நிறுவனத்தை மாற்றி வருகின்றனர். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அரசு பணியாளர்கள் அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்களுக்கும் ஏன் மாறுவதில்லை என்ற கேள்விக்கு பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில்,"சம்பளம் குறைவாக இருந்தாலும், அரசு நிறுவனங்களில் கிடைக்கும் ஒரு சுதந்திரம் தனியார் நிறுவனங்களில் கிடைக்காது, அதேபோல் பணியாளர்கள் மத்தியில் இருக்கும் ஒரு உறவு முறை தனியார் நிறுவனங்களில் கண்டிப்பாக கிடைக்காது." என அவர் தெரிவித்தார்.

எல்லாம் சரி தான்...

எல்லாம் சரி தான்...

தனியார் நிறுவனங்கள், நிறுவனத்தில் கொட்டிய மூலதனத்திற்காக உழைக்கின்றனர், குறிப்பிட்ட வளர்ச்சியும் கிடைக்கிறது. ஆனால் மத்திய அரசுகள் தொடர்ந்து அரசு நிறுவனங்களில் கொட்டி வரும் மிகப்பெரிய தொகைக்கு (மக்களின் பணம்) ஈடான பலன் கிடைக்கிறதாத என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CEO pay: private sector still far ahead of PSUs

One of the many things that came under the scanner after news of the Syndicate Bank scam broke recently is the disparity in the salaries of senior executives in the private and public sectors.
Story first published: Monday, August 18, 2014, 14:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X