வறுமையை ஒழிக்க உலக வங்கியை நாடும் பிரதமர் மோடி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக நாடுகள் மத்தியில் இந்தியா ஒரு வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இன்னும் இங்கு வறுமையில் பல ஆயிரக் கணக்கானோர் வாடி வருகின்றனர். இந்தியாவின் 68வது சுதந்திர ஆண்டிலி நாட்டில் நிலவி வரும் வறுமையை ஒழிக்க உலக வங்கி இந்தியாவிற்கு உதவ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியடையாத பகுதிகளில் பல உள்ளது, இப்பகுதிகளில் நிலவி வரும் வறுமையை ஒழித்து நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண உலக வங்கி உதவ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(READ: 8 documents you must check before buying property in India)

ஜிம் யோங் கிம்

ஜிம் யோங் கிம்

டெல்லியில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்- ஐ கடந்த மாதம் சந்தித்தப்போது இந்த பிரச்சினை பற்றி திரு மோடி பேசினார். இந்தப் பிரச்சினையில் உலக வங்கி இதற்கான சில திட்டங்களை உறுதிசெய்த பின்னர் இந்திய அரசிற்கு பதிலளிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது இத்திட்டத்திற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.

சந்திப்பு

சந்திப்பு

பிரதமர் நிதி உதவி பற்றி நேரடி கோரிக்கை இல்லையன்றாலும், அவருக்கு திறமை, அளவீடு மற்றும் வேகம் ஆகியவை தேவைப்படுவதாக தெரிவித்தார் என திரு கிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "மிக முக்கிய இந்த சந்திப்பு புதிய பிரதமரைச் சந்தித்து வளர்ச்சிக்கான அவருடைய பார்வையைக் குறித்து அறியவும், இந்தியாவுடனான எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உதவும். எங்கள் சந்திப்பு மிகவும் சிறப்பானதாகவும், உலக வங்கியின் தலைவராக என்னை மிகவும் கவர்ந்த சந்திப்பாகவும் அமைந்தது" என அவர் தெரிவித்தார்.

அதிக கடன் பெறும் இந்தியா!!!

அதிக கடன் பெறும் இந்தியா!!!

உலக வங்கியிடம் கடன் பெறும் நாடுகளில், இந்தியா மிகவும் முக்கியமான மற்றும் மிக அதிகமாகக் கடன் பெறும் நாடு என்பதோடு மட்டுமல்லாமல், அதன் தலைவர் தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசின் ஆலோசனைகளைப் பெறுவதில் முக்கிய பங்காற்றுவார்.

உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

இந்த சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி, கவனம் செலுத்தவேண்டிய ஒரு முக்கிய துறையான திறன் மேம்பாடு பற்றி ஆலோசனைகளைக் கேட்டறிந்ததுடன், "உற்பத்தியினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்த வேண்டும்" என்று கூறியதுடன் அதற்குத் தேவையான ஆலோசனைகளைத் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

நாட்டில் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம், உற்பத்தியில் கவனம் செலுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகம் கொண்ட பொருளாதாரத் துறைகளில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஒரு ஊக்கமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM seeks help of World Bank to cut poverty

Prime Minister Narendra Modi has suggested that World Bank should help India in making a visible impact on reducing mass poverty in the under-developed regions of the country to show a perceptible change.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X