சிறு வங்கிகளை துவங்க தயாராகும் 100 நிறுவனங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் முக்கிய கொள்கை. இந்த இலக்கை அடையும் பொருட்டும் வெளிநாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் சிறிய வங்கிகள் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இத்தகைய சிறிய வங்கிகளை இந்தியாவில் துவங்க சுமார் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக டெல்லியை சேர்ந்த அசோசேம் என்கிற ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 நிறுவனங்கள்

100 நிறுவனங்கள்

இந்த 100 நிறுவனங்களில் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டும் அல்லாமல பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆர்வுமுடன் உள்ளது. இவற்றில் நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், ஐடி மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் ஆகியனவும் அடங்கும். இத்தகைய நிறுவனங்கள் வங்கிகளை திறப்பதனால் நிறுவனங்களும் அதிகப்படியான முடலீட்டை மக்களிடம் இருந்து நேரடியாக பெறலாம். ம

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் இறுதி வழிகாட்டு தலுக்காகக் காத்திருக்கின்றன. அனைவருக்கும் நிதிச் சேவை கிடைக்கச் செய்வதற்காக சிறிய வங்கிகள் தொடங்க அனுமதிக்கப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

பேமென்ட் பாங்க்
 

பேமென்ட் பாங்க்

கடந்த மாதம் தனது பட்ஜெட் உரையில் பேமென்ட் வங்கிகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு வார காலத்தில் இது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. இத்தகைய முயற்சிகளின் மூலம் அடுத்த சில வருடங்களில் இந்தியாவில் பல வங்கி நிறுவனங்கள் இருக்கும். ஆனால் இத்தகைய நிறுவனங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் பதில்...

ரிசர்வ் வங்கியின் பதில்...

இத்தகைய வங்கிகளை தொழில் நிறுவனங்கள் அமைந் துள்ள தொழிற்பேட்டையில் அமைக்கலாமா நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கலாமா அல்லது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா? என்பது போன்ற விவரங்களை நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Many companies queue up to turn into small banks

Reiterating its bullishness on the domestic equities, Swiss brokerage UBS has said Nifty will scale the 8,000-mark by December even though market expectations from government remain "unrealistically" high.
Story first published: Tuesday, August 19, 2014, 12:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X