இந்திய தொழில் துறையின் சக்தி வாய்ந்த பெண்கள்!!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்திய தொழில்துறைக்கு நாளுக்கு நாள், வளர்ந்த நாடுகளின் போட்டி அதிகரித்த வண்ணமே உள்ளது. இத்தகைய போட்டிக்கு எதுவாக இந்தியா பல பரிமானங்களில் சிறப்பாக வளர்ந்து வருகிறது என்பதே வெளிப்படையான உண்மை.

இந்த அதீத வளர்ச்சியில் பெண்களின் பங்கும் அளப்பறியது. ஒளவையார், காக்கைபாடினியார் முதல் இந்திரா காந்தி, இந்திரா நூயி வரையிலும் கல்வி, அரசியல், தொழில் மற்றும் வணிகம் என பல துறைகளிலும் முத்திரை பதித்த பெண்களையும் கொண்டுள்ளது நம் பாரத நாடு.

அந்த வகையில், இன்றைய நாட்களில் இந்திய தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் 13 சக்தி வாய்ந்த பெண்களை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்பட்டியலை பிஸ்னஸ் டூடே தயாரித்தது. பெண்ணைப் போற்றி வளர்க்கும் பண்பாடைக் கொண்டுள்ள இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு இந்த சக்தி வாய்ந்த பெண்களின் பங்களிப்பைப் பற்றித் தெரிந்து கொண்டு பெருமைப்படுவோம்!

மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்

மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்

இவருடைய தலைமையில் ஐசிஐசிஐ வங்கி ரூ.10,000 கோடி என்ற நிகர இலாப அளவை 2013-14-ம் ஆண்டில் எட்டியது, இந்த ஒரு சாதனை போதும் இவருடைய சக்தியைப் பறைசாற்றும். மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்திருக்கும் கொச்சார், உயிரோட்டமில்லாத வளர்ச்சியை விரும்பமாட்டார்.

துணைத் தலைவர், பிராமல் எண்டர்பிரைசஸ்

துணைத் தலைவர், பிராமல் எண்டர்பிரைசஸ்

பயிற்சி பெற்ற மருத்துவரான இவர், 2013-14-ம் ஆண்டில் மாபெரும் சாதனையை செய்துள்ளார். இந்நிறுவனத்தின் அல்சீமர் டிரேஸருக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் யூஎஸ்எஃப்டிஏ-வின்அனுமதியை பிராமல் பெற்றுள்ளது. இதுபோல் 'இந்தியாவில் இதற்கு முன்னர் இப்படிநடந்ததில்லை' என்று பிராமல் இதை உணர்ச்சிவசத்துடன் குறிப்பிடுகிறார்.

துணை செயல் தலைவர், அப்பல்லோ மருத்துவமனை

துணை செயல் தலைவர், அப்பல்லோ மருத்துவமனை

சமீபத்தில் இவருடைய தந்தையான பிரதாப்.சி.ரெட்டி தன்னுடைய நான்கு மகள்களுக்கும் புதிய பதவிகளை அறிவிக்கும் வரை அப்பல்லோ மருத்தவமனை குழுமத்தின் மேலாண் இயக்குநராக பிரீத்தா ரெட்டி இருந்தார். மேலும், திரு.பிரதாப் ரெட்டி தன்னுடைய மூத்த மகள் பிரீத்தாவையே என்றும் தன்னுடைய வாரிசாக கருதி வந்தார்.

முன்னாள் மேலாண் இயக்குநர், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ்

முன்னாள் மேலாண் இயக்குநர், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ்

9 ஆண்டுகள் பணிக்குப் பின்னர், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறினார். ஆனால், வாடியா குழுமத்தின் பாம்பே டையிங் மற்றும் கோஏர் ஆகிய நிறுவனங்களின் போர்டு மெம்பராக இன்றும் இருந்து வருகிறார்.

தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், பையோ-கான் லிமிடெட்

தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், பையோ-கான் லிமிடெட்

ஜனவரி மாதம், மைலேன் அவருடைய நிறுவனம் கைகோர்த்துக் கொண்டதால், பையோசிமிலரைத் தொடங்க முடிந்தது. அதே போல சிலவகை மார்பக புற்று நோய்களை இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முறைகளையும் செய்ய முடிந்தது. இவ்வகையிலான சிகிச்சைகளை இந்தியாவிலேயே முதல்முறையாக செய்ய பையோகானும், அதன் தலைவரும் தான் காரணம்!

மேனேஜிங் பார்ட்னர், AZB & Partners

மேனேஜிங் பார்ட்னர், AZB & Partners

சேம்பர்ஸ் மற்றும் பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் தன்னைத் தானே 'ஒரு நிறுவனமாக' அவர் அழைத்துக் கொள்கிறார். 2013-ம் ஆண்டைப் பொறுத்த வரையில் மோடி தான் இந்தியாவின் மிகவும் சுறுசுறுப்பான சட்ட ஆலோசகராக இருந்திருக்கிறார் என்று மெர்ஜர் மார்க்கெட் குறிப்பிட்டுள்ளது. 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே பில்லியன் டாலர்களுக்கும் மேலான ஒப்பந்தங்களை AZB & Partners நிறுவனம் முடித்துள்ளது.

கன்ட்ரி ஹெட், ஹெச்.எஸ்.பி.சி இந்தியா

கன்ட்ரி ஹெட், ஹெச்.எஸ்.பி.சி இந்தியா

முன்னதாக இவர், ஹெச்.எஸ்.பி.சி. இந்தியாவின் வங்கி செயல்பாடுகள் பிரிவின் தலைவராக மட்டும் இருந்தார். இன்று ஒட்டுமொத்த ஹெச்.எஸ்.பி.சி இந்தியா நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கும் தலைவராக உள்ளார். வங்கி சேவைகள், காப்பீடு, சொத்து மேலாண்மை,பாதுகாப்பு மற்றும் பிபிஓ செயல்பாடுகள் என அனைத்தும் இதில் அடங்கும்.

மேலாண் இயக்குநர், ஹெச்.டி.எஃப்.சி

மேலாண் இயக்குநர், ஹெச்.டி.எஃப்.சி

இவருடைய தலைமையின் கீழ், 2014-ம் நிதியாண்டில் ரூ.5,440 கோடிகளை நிகர இலாபமாக பெற்றுள்ளது இந்த வங்கியியல் நிறுவனம். இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும்.மேலும், ரூ.7.14 இலட்சம் ஊதியமாகப் பெறுவதன் மூலம், நிறுவனங்களின் தலைவர்களிலேயே மிகவும் அதிகமான ஊதியம் பெறுபவராகவும் 2014-ம் ஆண்டில் திகழ்ந்தார்.

தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, டாஃபே லிமிடெட்

தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, டாஃபே லிமிடெட்

உருவத்தில் சிறியவராகவும் மற்றும் மென்மையாகப் பேசுபவராகவும் இருந்தாலும் உறுதியான மனமும், கூர்மையான புத்திசாலித்தனமும் கொண்டவராக இருக்கும் திரு.மல்லிகா சீனிவாசன்அவர்கள், இந்திய நிறுவனமாக இருந்து தன்னுடைய நிறுவனத்தை ஒரு உலகின் மூன்றாவது பெரியடிரக் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றியவர்!

தலைமை செயல் அதிகாரி, ஜெ.பி. மோர்கன் இந்தியா

தலைமை செயல் அதிகாரி, ஜெ.பி. மோர்கன் இந்தியா

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான ஜெ.பி.மோர்கன் முதலீட்டு வங்கியியல்நிறுவனத்தில், சொத்து மேலாண்மை, கருவூல சேவைகள் ஆகிய துறைகளை நிர்வகிப்பதுடன்,திரு.மோர்பாரியா நியூயார்க்கில் உள்ள ஜெ.பி.மோர்கனின் உலகளாவிய திட்டமிடல் குழுவின்உறுப்பினராகவும் மற்றும் ஆசியா-பஸிபிக் செயற்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஆக்சிஸ் வங்கி

மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஆக்சிஸ் வங்கி

மார்ச் 2014-ல் இவருடைய வங்கி முதன் முறையாக பில்லியன் டாலர்கள் நிகர இலாபத்தை பதிவுசெய்துள்ளது. சில்லறை மற்றும் கட்டுமானத் துறைகளில் திரு.சர்மா பெருமளவு கவனித்துவருகிறார்.

மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஆல்டர்நேட் அஸெட் மேனேஜ்மென்ட்

மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஆல்டர்நேட் அஸெட் மேனேஜ்மென்ட்

ஐசிஐசிஐ வென்ட்சர் நிறுவனத்தை 10 ஆண்டு காலத்திற்கு தலைமையேற்று நடத்திய பின்னர்,2009-ம் ஆண்டு தன்னுடைய சொந்த முதலீட்டு நிறுவனத்தை தொடங்கினார் இவர். இவருடையவாழ்க்கையில் சில குறிக்கோள் மற்றும் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருகிறார். குறுக்கு வழிகூடாது மற்றும் வேகமான வெற்றிகளுக்காக நீண்ட கால பெருமைகளை இழந்து விடக் கூடாதுஎன்பவை தான் இவருடைய கொள்கைகள்

தலைவர், ஹெச்.டி. மீடியா

தலைவர், ஹெச்.டி. மீடியா

2014-ம் நிதியாண்டில் தன்னுடைய நிறுவனம் முந்தைய ஆண்டை விட 24 கோடிகள் அதிகமானஇலாபமடையும் வகையில் இவர் வழிநடத்திச் சென்றுள்ளார். 2013-ம் ஆண்டில், பத்தாண்டுகளுக்கானடெல்லி பெண் சாதனையாளர் என்ற விருதைப் பெற்றார் இவர். ஊடகங்கள் வாயிலாக நாட்டின்வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக இந்த விருதை இவர் பெற்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Most Powerful Women in Indian Business

A look at what the 13 women in Business Today's elite Most Powerful Women in Indian Business list have been up to recently.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X