6000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் மலேசிய ஏர்லைன்ஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோலாலம்பூர்: இரு விமானங்கள் இழப்பு, 400 பயணிகளின் உயிர், நிறுவனத்தின் நிலையற்ற தன்மையின் காரணமாக நிறுவனத்தை அரசு முழூமையாக கைபற்றியது. மேலும் மக்களிடையே நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் இழந்த நிலையில் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், மேலும் நிறுவனத்தை நடந்த தனது 20,000 பணியாளர்களில் சுமார் 6000 பேரை பணியில் இருந்து நீக்கவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதனால் இந்நிறுவன பணியாளர்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.

கஜானா

கஜானா

மலேசிய அரசின் முதலீட்டு நிறுவனமான கஜானா, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சுமார் 80 சதவீத பங்குகளை கைபற்றியுள்ளது. மேலும் மீதமுள்ள 20 சதவீத பங்குகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் கைபற்றி, இந்நிறுவனத்தில் பங்குசந்தையில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கை

மறுசீரமைப்பு நடவடிக்கை

சரிவில் தத்தளிக்கும் இந்நிறுவனத்தை 2017ஆம் ஆண்டுக்குள் லாபத்தை ஈட்டும் வகையில் செயல்பட கஜானா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 12 திட்ட அமசங்களை இந்நிறுவனம் தீட்டியுள்ளது, இதில் முக்கியமாக 6 பில்லியன் ரிங்கட் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

 6000 பணியாளர்கள்

6000 பணியாளர்கள்

மேலும் அதிகம் செயல்பாட்டில் இல்லாத இந்நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் நிறுவன செலவில் அதிகப்படியான பணத்தை குறைக்க முடியும் என கஜானா நிறுவனம் கூறியது.

விமான விபத்து

விமான விபத்து

மார்ச் 8ஆம் தேதி மலேசிய விமானம் MH370, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு புறப்பட்டது, விமான தொழிற்நுட்ப கோளாறு காரணமாக விமான எங்கு தொலைந்து போனது என்ற தெரியாத நிலையில் உள்ளது. அதேபோல் MH17 என்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையேறத்தில் பறந்து கொண்டு இருந்த போது ரஷ்ய ஆதரவு படைகள் ஏவுகணையின் மூலம் இவ்விமானத்தை தாக்கினர் இதில் இருந்த அத்தனை பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாவரும் உயிர் இழந்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Malaysia Airlines to slash 6000 jobs

Malaysia Airlines will cut 6,000 of its 20,000 jobs as part of a major overhaul, the company said on Friday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X