ரயில் கட்டணத்திற்கு இணையாக குறைந்த விமான கட்டணம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மலிவு விலை விமான சேவை நிறுவனங்களில் மிக முக்கிய நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் உள்நாட்டு பயணத்திற்கு வெறும் 499 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை இன்று காலை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கும் 3ஆம் தர ஏ.சி வகுப்பில் செல்ல 1485 ரூபாய் ஆகிறது ஆனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முலம் சென்றால் 1,499 ரூபாய் மட்டும் தான் (சலுகை கட்டணங்கள் அல்லாமல்..). வெறும் 15 ரூபாய் மட்டுமே அதிகம்.

முன்று நாள் மட்டுமே

முன்று நாள் மட்டுமே

திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் 2015ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரையிலான நாட்களுக்கும் விமான பயணத்திற்கான டிக்கெட்டை பதிவு செய்துக்கொள்ளலாம்.

ஹாலிடே.....

ஹாலிடே.....

இந்த சலுகை விலையின் மூலம் வாடிக்கையாளர் தங்களின் விடுமுறை நாட்களை திட்டமிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் கொண்டாடலாம் என இந்நிறுவனத்தின் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

எல்லாத்துக்கும் பொருந்தும்...

எல்லாத்துக்கும் பொருந்தும்...

மேலும் இந்த சலுகை, ஸ்பைஸ்ஜெடின் நேரடி விமானம், வழித்தட விமானம் மற்றும் கணக்டிக் பிலைட் விமான பயணங்களுககும் பொருந்தும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு பயணிகளின் பணத்தை கணிசமாக இச்சலுகை சேமிக்கும்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

கடந்த வாரம் ஏர் இந்தியா நிறுவனம் வெறும் 100 ரூபாய் என்ற விலையில் விமான டிக்கெட்டை வழங்கியது நாட்டின் மக்கள் மத்தியில் விமான பயணத்திற்கான ஆர்வத்தை துண்டியுள்ளது. மேலும் இந்த சலுகை விலை கட்டணத்தில் டிக்கெட் புக் செய்ய பயணிகள் இந்நிறுவன இணையதளத்தை அணுகியதன் காரணமாக இத்தளம் இரண்டு நாட்களாக முடங்கியது.

நாட்டின் வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சி

அடுத்த சில வருடங்களில் நாட்டின் வளர்ச்சி விமான கட்டணங்களை அதிகப்படியாக குறைக்கும் என தெரிகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்திய சந்தையில் விமான சேவை துவக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமுடன் உள்ளதால், நிறுவனங்களுக்கும் இடையே உள்ள போட்டியின் காரணமாகவும் கட்டணங்கள் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

நஷ்டத்தில் விமான நிறுவனங்கள்

நஷ்டத்தில் விமான நிறுவனங்கள்

ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா, ஏர் இந்தியா, மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வீசுவதலும், செயல்பாட்டு கட்டணங்கள் அதிகரித்து வருதாலும் இந்த விமான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. குறிப்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 26 - 35 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை பெற்று வருகிறது.

கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் அதிக பங்குகளை கொண்ட சன் டிவி புகழ் கலாநிதிமாறன் இந்நிறுவனத்தை தலைமை வகித்து நடத்தி வருகிறார். மேலும் 2ஜி ஊழலில் வழக்கில் இவரும் இவரது தம்பி மற்றும் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சரான தயாநிதி மாறனும் அவர்களும் ஒரு முக்கிய குற்றவாளியாக கருதப்படுகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரனை படுவேகமாக நடந்து வருகிறது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet offers Rs. 499 fare on domestic network for 'Early Birds'

Country's second largest airline by market share, SpiceJet on Monday launched yet another limited period special fare scheme, 'Early Bird', offering customers ticket prices as low as Rs. 499 on its domestic network.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X