இந்தியாவில் வீட்டு மனை விலை 9% சரிவை சந்தித்துள்ளது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி கடந்த ஒரு வருடத்தில் உச்சத்தை பெற்றுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகளாவிய வீட்டு விலைகள் தொடர்பான தகவல் தொகுப்புகளை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

வீடுகளின் விலைகள் தொடர்பாக IMF நிறுவனம் கணக்கில் எடுத்துக் கொண்ட 52 நாடுகளில், இந்தியாவில் தான் மிகவும் மோசமான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான விலை சரிவு

இந்தியாவில் அதிகப்படியான விலை சரிவு

விலை வித்தியாசத்தில் வருடாந்திர சதவீதத்தில் சொத்துக்களின் மதிப்பிட்ட IMF நிறுவனம், இந்தியா 9.1 சதவீதம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, முன்னணி ரியல் எஸ்டேட் சந்தைகளில் இந்தியாவில் தான் விலை அதிகளவு சரிந்துள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நிதிச் சிக்கல்கள்

நிதிச் சிக்கல்கள்

ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிகழ்ந்து வரும் நிதிச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை விட மோசமான சரிவாக இந்தியா உள்ளது. கிரீஸ், இத்தாலி, சைப்ரஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளிலும் சொத்துக்களின் விலை குறைந்திருந்தாலும், அவை குறைவான வேகத்திலேயே குறைந்துள்ளன.

52 நாடுகள்
 

52 நாடுகள்

இந்நிலையிலும் பெரும்பாலான நாடுகளில் விலைகள் அதிகரித்து வருவதால், ரியல் எஸ்டேட் துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சி இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பொழுது தகவல்கள் சேகரிக்கப்பட்ட 52 நாடுகளில், 33 நாடுகளில் விலைகள் அதிகரித்துள்ளன மற்றும் 19 நாடுகளில் விலைகள் குறைந்திருக்கின்றன.

ரஷ்யாவிலும் வீழ்ச்சி

ரஷ்யாவிலும் வீழ்ச்சி

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய பிற வளர்ந்த நாடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் பெரிய பொருளாதார சக்திகளான சீனா, பிரேஸில் மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளில் வளர்ச்சியும், இந்தியா மற்றும் ரஷ்யாவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது ரியல் எஸ்டேட் துறை.

வங்கிகளுக்கு ஒரு சான்று

வங்கிகளுக்கு ஒரு சான்று

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இந்த தகவல்களின் மூலம் சொத்துக்களின் விலை ஏற்றம் மற்றும் வீழ்ச்சிகளை கவனத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்று IMF இணைய தளம் குறிப்பிட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வீடுகளின் விலை ஏற்றம் மற்றும் வீழ்ச்சிகளின் காரணமாக பல்வேறு பிரச்னைகளை வங்கிகள் சந்தித்தது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட்

இந்தியாவில் ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் துறையின் தகவல்களுக்காக IMF பயன்படுத்திய உலகளாவிய சொத்து வழிகாட்டி (Global Property Guide)-ம் கூட, இந்தியாவின் வீடுகளுக்கான சந்தை சரிவடைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய சொத்து வழிகாட்டி

உலகளாவிய சொத்து வழிகாட்டி

உலகம் முழுவதுமிருந்து ரியல் எஸ்டேட் தகவல்களை சேகரித்து வரும் இந்த நிறுவனம், அந்த தகவல்களை வட்டி விகிதம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தியுடன் இணைந்து தயார் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian home prices fell most in 52 nations, says IMF

Is India's real estate bubble finally bursting? The International Monetary Fund's recently-launched data series on global housing prices hints at that. Among 52 major markets for which IMF has collated house price data, India has witnessed the steepest fall. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X