வங்கிகளுடன் மல்லுகட்டும் மல்லையாவிற்கு புதிய பிரச்சனை!!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: விஜய் மல்லையா தலைமை வகிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் முழுவதும் பிரிட்டன் நிறுவனமான டியாஜியோ கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் விஜய் மல்லையா, நிறுவன பணத்தை முறையற்ற வகையில் யுபி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதாக டியாஜியோ குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இதை பற்றி விஜய் மல்லையாவிடம் விசாரனை மேற்கொள்ள டியாஜியோ உத்திரவிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் சுமார் 4,488.77 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.

விசாரனை

விசாரனை

சந்தேகத்திற்குரிய கடன் பற்றி யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவிடம் விரிவான மற்றும் விரைவான விசாரணையை, தேவையான ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்டு நடத்த டியாஜியோ உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் தகவல்

நிறுவனத்தின் தகவல்

இவ்விசாரணையின் போது மார்ச் 31,2013ஆம் ஆண்டின் நிறுவனத்தின் முந்தைய கடன், வைப்பு மற்றும் முன்தொகை தகவல்களை மையமாக வைத்துக்கொண்டு நடத்தப்பட வேண்டும் எனவும் டியாஜியோ தெரிவித்துள்ளது. (கடன் கொடுத்தீர்களா?? என்ன கடன் கொடுத்தீர்களா??.. இல்ல பணம் கொடுத்தீர்களா?? என்ன பணம் கொடுத்தீர்களா?? )

முறைகேடான கடன்கள்

முறைகேடான கடன்கள்

டியாஜியோ நிறுவனம் யுபி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தில் சுமார் 1337.40 கோடி ரூபாய் முறைக்கேடான விஜய் மல்லையா பயன்படுத்தியுள்ளார். ( ஏம்பா தம்பி உனக்கு எதுக்கு இந்த வேலை சொல்லு... இருக்க பிரச்சனைய சமாளிக்கவே உனக்கு நாக்கு தள்ளுது...)

வங்கிகளுடன் மல்லுகட்டும் மல்லையா...

வங்கிகளுடன் மல்லுகட்டும் மல்லையா...

ஏற்கனவே யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மல்லையாவை நாணயமற்றவர், தவறிழைத்தவர் என கூறிவிட்டது. இந்நிலையில் அவர் வங்கி அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டும் அல்லாமல் மேலும் சில வங்கிகள் இவரை நாணயமற்றவர் என்று அறிவிப்பதற்கான பணிகள் செய்து வருகிறது.

டியாஜியோ

டியாஜியோ

விஜய் மல்லையா நிறுவனத்தின் 53.4 சதவீத பங்குகளை டியாஜியோ நிறுவனம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. டியாஜியோ நிறுவனம் கைபற்றிய பங்குகளின் மதிப்பு 11,166.5 கோடி ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

United Spirits board to probe loans to UB Group on Mallya's wilful defaulter tag

The Board of United Spirits Ltd, now controlled by Diageo, has ordered a probe into the loans given by United Spirits to UB Group companies as it posted a whopping net loss of Rs 4,488.77 crore for the financial year ended March 31, 2014.
Story first published: Friday, September 5, 2014, 16:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X