டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி நுழைந்தார்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த ஒரு வருடத்தில் சுமார் 152 சதவீத வளர்ச்சியை சந்தித்த கெளதம் அதானி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார். இந்த வருடமும் முதல் இடத்தை பிடித்தவர் நம்ம முகேஷ் அம்பானி தான்.

சீன ஆய்வு நிறுவனமான ஹூருன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி கெளதம் அதானி அவரிகளின் சொத்து மதிப்பு 44,000 கோடி ஆகும்.

கெளதம் அதானி

கெளதம் அதானி

கடந்த 10 வருடத்தில் அதானி குழுமத்தின் வளர்ச்சி அசாதாரமானது, குறிப்பாக மின் உற்பத்தி, துறைமுகம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய துறைகளில் அவர் அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்துள்ளார். மேலும் இவர் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நன்பர் என்பது குறிப்பிடதக்கது.

அம்பானி- திலீப்- லக்ஷ்மி மிட்டல்

அம்பானி- திலீப்- லக்ஷ்மி மிட்டல்

இந்திய பணக்கார்ரகளின் பட்டியிலில் 37 சதவீத வளர்ச்சியும் 1.65 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சிங்வி 1.29 இலட்சம் கோடி சொத்துக்களுடன் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. லண்டன் நகரத்தின் ஐயன் மேன் லக்ஷ்மி மிட்டல் 4 சதவீத உயர்வுடன் 97,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 3ஆம் இடத்தில் உள்ளார்.

மும்பை முதல் இடம்

மும்பை முதல் இடம்

அதிக பணக்காரர்கள் கொண்ட நகரங்களில் மும்பை முதல் இடத்திலும், டெல்லி, பெங்களுரூ, துபாய் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது. இப்பட்டியலில் சென்னை 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (52) 37 சதவீத வளர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளார்.

திலீப் சிங்வி

திலீப் சிங்வி

மருந்து ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ள சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் 43 சதவீத வளர்ச்சியுடன் இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

லக்ஷ்மி மிட்டல்

லக்ஷ்மி மிட்டல்

எஃகு உற்பத்தியில் இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் முன்னணி நிறுவனமாக திகழும் லக்ஷ்மி மிட்டல் 4 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை பெற்றும் 3 இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 12 சதவீத வளர்ச்சியுடன் 4ஆம் இடத்தில் உள்ளார்.

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனங்களின் முன்னோடி ஹெச்.சி.எல் இந்நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் 41 சதவீத வளர்ச்சியுடன் 5வது இடத்தில் உள்ளார்.

எஸ்.பி.ஹிந்துஜா

எஸ்.பி.ஹிந்துஜா

லண்டனில் வாழும் எஸ்.பி.ஹிந்துஜா இவ்வருடம் தனது வர்த்தகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

பலோன்ஜி மிஸ்திரி

பலோன்ஜி மிஸ்திரி

கட்டுமான துறையில் இந்தியாவில் தலைசிறந்தவர்கள் பலர் இருந்தாலும் அதில் முதன்மையானவர் பலோன்ஜி மிஸ்திரி அவர்கள் இவர் இவ்வருடம் 24 சதவீத வளர்ச்சியுடன் 7வது இடத்தில் உள்ளார்.

கே.எம்.பிர்லா

கே.எம்.பிர்லா

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்களம் பிர்லா 16 சதவீத வளர்ச்சியுடன் 8வது இடத்தில் உள்ளார்.

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் 9 சதவீத வளர்ச்சியுடன் 9வது இடத்தில் உள்ளார்.

கெளதம் அதானி

கெளதம் அதானி

இப்பட்டியலில் புதிதாக நுழைந்த கெளதம் அதானி சுமார் 152 சதவீத வளர்ச்சியுடன் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani breaks into top 10 rich club as wealth jumps 152%

A sharp 152% jump in his wealth saw Adani Group chairman Gautam Adani break into the list of 10 richest Indians even as Mukesh Ambani retained the pole position, according to a latest report.
Story first published: Wednesday, September 17, 2014, 12:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X