சீன அதிபர் வருகையால் பங்கு சந்தை சூடு பிடித்துள்ளது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சீன அதிபர் இந்திய சந்தையில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்வோம் உறுதி அளித்தன் மூலம், இன்று மும்பை பங்கு சந்தையில் எவ்வித இறக்குமும் இன்றி தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது. அதேபோல் நிஃப்டியும் புதிய உயரத்தை அடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

மதிய வேளையில் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி வகிதத்தை மாற்றவில்லை என அறிவித்தது, மேலும் தனது பத்திர கொள்முதல்-யை 10 பில்லியன் டாலர் அளவிற்கு குறைக்கவும் திட்டமிட்டுள்ளது, இதன் எதிரொலியாக பங்கு சந்தை 27,000 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டது.

இன்றைய வர்த்தகத்தில் வங்கிதுறை மற்றும் உற்பத்தி துறை நிறுவனங்களின் பங்குகள் சிறப்பாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

இன்று காலை 26,516 புள்ளிகளில் துவங்கிய மும்பை பங்கு சந்தையின் வர்த்தகம் 27,084.05 என்ற புள்ளிகள் வரை உயர்ந்தது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் பெரும் அளவில் எந்த வித சரிவும் இல்லாமல் சிறப்பாக உள்ளது குறிப்பிடதக்கது.மதிய 3 மணியளவில் மும்பை பங்கு சந்தை 27,000 வரை உயர்ந்து கடந்த நான்கு நாள் கண்ட சரிவை சமன் செய்தது.

நிஃப்டி

நிஃப்டி

மும்பை பங்கு சந்தையை போலவே நிஃப்டியும் 8100 என்ற புதிய உயரத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 124.35 புள்ளிகள் உயர்ந்ததுள்ளது.

லாபம் அடைந்தவர்கள்
 

லாபம் அடைந்தவர்கள்

மும்பை பங்கு சந்தையின் தகவல் படி இன்றைய வர்த்தகத்தில் கட்டுமான நிறுவனங்களான யூனிடெக், ஹெச்.டி.ஐ.எல், ஐபி ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீன அரசின் கட்டுமான சார்ந்த முதலீட்டு திட்டங்கள் என்பது நிதர்சனமான உண்மை.

நஷ்டத்தை  சந்தித்த நிறுவனங்கள்

நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்

முதலீட்டாளர்கள் கட்டுமான மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் மீது கவனத்தை செலுத்தி வருவதால் மருந்து உற்பத்தி, உணவு பொருடகள் உற்பத்தி, கப்பல் கட்டுமான துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty hits 8100, Sensex soars over 400 pts; banks, infra up

Hero, HDFC, BHEL, L&T and Wipro are up around 3 percent each. Among the losers are HUL and Infosys. Midcaps and small caps are on fire gaining over 3 percent each.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X