2,100 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் மைக்ரோசாப்ட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாட்டில்: உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமாகவும் உருமாறி வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் மென்பொருள் தரத்தை அதிகரிக்கவும், செலவீனத்தை குறைக்கவும் சுமார் 18,000 பணியாட்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாடெல்லா தெரிவித்தார்.

 

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் இயங்கி வந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவை முற்றிலுமாக முட முடிவு செய்துள்ளது இதன் மூலம் இந்நிறுவனம் 2,100 பேரை நிறுவனத்தை விட்டு நீக்க உள்ளது.

கிளை நிறுவனங்கள்

கிளை நிறுவனங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மவுன்டைன் வியூவ் கிளையில் 50 பேரும், கலிபோர்னியா கிளையில் 160 பேரும், சியாட்டில் பகுதியில் 747 பேரும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், இதில் இந்த 2,100 பணி நீக்கத்தில் அடக்கம் எனவும் இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இரண்டாம் கட்டம்

இரண்டாம் கட்டம்

இந்நிறுவனத்தின் தலைவர் சத்ய நாதெல்லா கூறுகையில், இப்பணி நீக்கத்தில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 13,000 பணியாட்களை நிறுவனத்தை விட்டு நீக்கப்போவதாக அவர் தெரிவித்தார். சரி 13,000+2,100= 15,100 மட்டும் தானா?? இதன் மையக்கருத்து அடுத்த 9 மாத காலகட்டத்தில் மேலும் 2,900 பணியாட்களை இந்நிறுவனம் வெளியேற்ற உள்ளது.

அமெரிக்கா மட்டும் அல்ல
 

அமெரிக்கா மட்டும் அல்ல

 இந்த பணிநீக்கம் அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகில் இருக்கும் அத்தனை கிளைகளிலும் இதன் பாதிப்பு இருக்கும். இத்தகைய நிலைக்கு என்ன காரணம்???

நோக்கியா தான் காரணம்

நோக்கியா தான் காரணம்

18,000 என்ற எண்ணிக்கையிலான பணி நீக்கம் இதுவரை இந்நிறுவனம் சந்தித்ததில்லை. இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம் சரிவில் இருந்த நோக்கியா நிறுவனத்தை கைபற்றியது தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft lays off 2,100 as part of earlier job cut plan

Microsoft Corp will close its Silicon Valley research-and-development operation as part of 2,100 layoffs announced on Thursday, as it moves toward its new CEO's goal of cutting 18,000 staff, or about 14 percent of its workforce. 
Story first published: Friday, September 19, 2014, 11:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X