இந்தியாவில் தலை காட்ட துவங்கும் பெருந்தலைகள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க சந்திப்பை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் அக்டோபர் மாதம் இந்தியாவின் நரேந்திர மோடி அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளார்.

 

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும், குறிப்பாக மோடி அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்ட பின்பு, பெரு நிறுவன தலைவர்கள் தொடர்ந்து இந்தியா வருகின்றனர். அப்படி யார் வந்தாங்க??

2 முக்கிய பிரமுகர்கள்

2 முக்கிய பிரமுகர்கள்

உலகளவில் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா ஆகியோர் இந்தியா வந்தனர். இதில் என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் கேட்கலாம். பிசோஸ் இந்தியாவில் இந்நிறுவனத்தில் 2 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தை துவங்கவும், சத்ய நாடெல்லா 2 டிரிலில்யன் டாலர் வர்த்தகத்தை உருவாக்கும் கிளவுட் டேட்டா சென்டரை அமைக்கவும் வந்துள்ளனர்.

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களின் இந்தியா வருகையும், பிரதமர் சந்திப்பையும் உறுதி செய்துள்ளார். இதன் படி வருகிற அக்டோபர் 9, 10ஆம் தேதிகளில் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் பிரதமர் உடன் முக்கிய தலைவர்களுடன் சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தலைக்காட்ட என்ன காரணம்
 

தலைக்காட்ட என்ன காரணம்

உலகின் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் தலைகாட்ட துவங்குவதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் படிப்பறிவு கொண்ட மக்கள் தொகை அதிகம். மேலும் உயர் தொழிற்நுட்பகளுக்கான வர்த்தகத்திற்கு சாத்தியகூறுகள் இந்தியாவில் அதிகம், இதனை கைபற்றவே பெரு நிறுவனங்களின் பார்வை தற்போது இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.

மார்க் என்ன செய்வார்??

மார்க் என்ன செய்வார்??

இச்சந்திப்பின் முக்கிய பணிகளை தெரிவிக்க மறுத்த ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் நிறுவனம் மத்திய அரசின் சுவாச் பாரத் என்னும் துய்மையான சுத்தமான இந்தியாவை உருவாக்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது என்று மட்டும் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர் எண்ணிக்கை 108.9 மில்லியன் என்ற அளவை எட்டும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை அடுத்து இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தையாக இருப்பது இந்தியா தான். இத்தகைய வாடிக்கையாளர் எண்ணிக்கை கொண்ட இந்தியாவில் அதிகப்படியான வருவாய் திரட்டவே மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியா வருகிறார்.

ஷெரில் சான்ட்பெர்க்

ஷெரில் சான்ட்பெர்க்

பிரதமர் மோடி பதவியேற்றிய சில நாட்களில் அவர் மீது விதித்திருந்த விசா தடைகள் அமெரிக்க அரசு திரும்ப பெற்றது. இதனிடையில் ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சான்ட்பெர்க் மோடியை சந்தித்தார்.

சமுக வலைதளம்

சமுக வலைதளம்

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுக்கு தெளிவாக்க கொண்டு சேர்க்க சமுக வலைதளத்த முழுமையாக பயன்படுத்தியது பிரதமர் நரேந்திர மோடி தான். இன்றளவும் இவர் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமுக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்.

ஒபாமா

ஒபாமா

மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா 2012ஆம் ஆண்டில் பெற்ற வெற்றிக்கு பெரும் பங்க வகித்தது சுமுக வலைதளம் தான். மேலும் 2008ஆம் ஆண்டு நடந்த வெற்றிக்கு வித்திட்டது மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். இவருக்கு உதவியாக கூகிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டீரிம்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

இண்டர்நெட் மற்றும் சமுக வலைதளத்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி எல்லாம் பயன்படித்த முடியும்,(இது மக்களை முளை சலவை செய்யும் செயல் தான்) அதை எப்படி நமக்கு சாதகமாக்கிக்கொள்ள முடியும் என டிசைன் செய்தது ஸ்டீவ் ஜாப்ஸ் தான். அவர் தலைமையில் உருவாக்கியா அத்தனை தயாரிப்புகளுமே வெற்றியின் உச்சத்தை தொட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jeff Bezos, Satya Nadella, now Mark Zuckerberg: America comes to India

Facebook founder Mark Zuckerberg will be visiting India this month and will most likely meet in this country one of the biggest fans (and user) of the social networking phenomenon he has created — Prime Minister Narendra Modi.
Story first published: Wednesday, October 1, 2014, 11:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X