பணக்கார மனிதர்களை பார்திருப்போம்.. பணக்கார வங்கிகளை பார்த்துண்டா..?

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: பணம், சொத்து மற்றும் வளம் ஆகியவைகளே மக்களை பணக்காரர்கள் என்ற நிலைக்கு உயர்த்தும் போது, உங்களுடைய வளங்களை வங்கிகளில் டெபாசிட் வாயிலாகவோ அல்லது பாதுகாப்பு பெட்டகங்களிலோ வைக்கும் போது வங்கிகளும் பணக்கார வங்கிகளாக உருமாறுகிறது.

இந்த வகையில் உலகில் பணக்கார மற்றும் செல்வச் செழிப்புகள் கொழிக்கும் 10 வங்கிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

1. வெல்ஸ் பர்கோ

1. வெல்ஸ் பர்கோ

சந்தை மூலதனம் : 261.72 பில்லியன் டாலர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாக வெல்ஸ் பார்கோ & கம்பெனி உள்ளது. சொத்து மதிப்பளவில் அமெரிக்காவின் 4-வது பெரிய வங்கியாகவும் மற்றும் சந்தை மூலதனைத்தைப் பொறுத்த வரையில் 261.72 பில்லியன் டாலர்களைக் கொண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யமாகவும் உள்ளது.

 

2. ஜெ.பி.மோர்கன் சேஸ்

2. ஜெ.பி.மோர்கன் சேஸ்

சந்தை மூலதனம் : 229.90 பில்லியன் டாலர்கள்

ஜெ.பி.மோர்கன் சேஸ் & கோ-வும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு வங்கியியல் மற்றும் நிதி நிறுவனமாகும். இது அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியாகவும் மற்றும் உலகிலேயே 6-வது மிகப்பெரிய வங்கியாகவும் உள்ளது.

 

3. இன்டஸ்ட்ரீயல் மற்றும் கமர்சியல் பேங்க் ஆஃப் சீனா
 

3. இன்டஸ்ட்ரீயல் மற்றும் கமர்சியல் பேங்க் ஆஃப் சீனா

சந்தை மூலதனம் : 196.21 பில்லியன் டாலர்கள்

மொத்த சொத்து மதிப்பளவில் உலகின் மிகப்பெரிய வங்கியாகவும் மற்றும் 196.21 பில்லியன் டாலர்களை சந்தை மூலதனமாகவும் கொண்டுள்ள வங்கியாக இது உள்ளது. 2014-ம் ஆண்டில் சீனாவின் நாட்டுடமையாக்கப் பட்ட 4-பெரிய வங்கிகளில் ஒன்றாக உள்ள இந்த வங்கி, 3.1 டிரில்லியன் சொத்துக்களை கொண்டுள்ளது. 106 வெளிநாட்டு கிளைகளுடன், கிட்டத்தட்ட 13,000 கிளைகளையும் மற்றும் முகவர்களையும் கொண்டு இந்த வங்கி இயங்கி வருகிறது.

 

4. ஹெச்.எஸ்.பி.ஸி ஹோல்டிங்ஸ்

4. ஹெச்.எஸ்.பி.ஸி ஹோல்டிங்ஸ்

சந்தை மூலதனம் : 191.43 பில்லியன் டாலர்கள்

பிரிட்டனின் தலைநகர் இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இங்கிவரும் பிரிட்டிஷ் பன்னாட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாக ஹெச்.எஸ்.பி.ஸி ஹோல்டிங்ஸ் உள்ளது. ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் அமைப்பினால் ஒரு புதிய ஹோல்டிங் குழும நிறுவனமாக 1991-ம் ஆண்டு இந்த வங்கி துவக்கப்பட்டது. 80 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 6,600 கிளைகளுடன் இந்த வங்கி ராஜநடை போட்டு வருகிறது.

 

5. பேங்க் ஆஃப் அமெரிக்கா

5. பேங்க் ஆஃப் அமெரிக்கா

சந்தை மூலதனம் : 181.77 பில்லியன் டாலர்கள்

ஆமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள சர்லொட்டே நகரைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமாக பேங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் இரண்டாவது வங்கி ஹோல்டிங் கம்பெனியான இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 181.77 பில்லியன் டாலர்களாகும்.

 

6. சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி

6. சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி

சந்தை மூலதனம் : 160.83 பில்லியன் டாலர்கள்

சீன மக்கள் குடியரசில் உள்ள 4 பெரிய வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். சந்தை மதிப்பைப் பொறுத்த வரையில் சீனாவின் இரண்டாவது பெரிய வங்கியாகவும் மற்றும் உலகளவில் 13-வது பெரிய வங்கியாகவும் சீன கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி உள்ளது. ஜீன் 2014-ன் நிலைப்படி இந்த வங்கியின் சந்தை மூலதனம் 160.83 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, உலகிலேயே பெரிய வங்கிகளில் 6-வது இடத்தை அடைந்துள்ளது.

 

7. சிட்டி குழுமம்

7. சிட்டி குழுமம்

சந்தை மூலதனம் : 144.63 பில்லியன் டாலர்கள்

நியூயார்க் நகரத்தின் கேந்திரமான மன்ஹாட்டன் பகுதியை தலைமையகமாகக் கொண்ட அமெரிக்க பன்னாட்டு வங்கியியல் மற்றும் நிதி சேவை நிறுவனமாக சிட்டி குழுமம் உள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவன ஒன்றிணைப்புகளில் ஒன்றாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றின் விளைவாகவே சிட்டி குழுமம் உருவாக்கப்பட்டது. வங்கியியல் துறையில் முடிசூடாமன்னனாக இருந்த சிட்டிகார்ப் நிறுவனமும், டிராவலர்ஸ் குழுமமும் ஒன்றாக சேர்ந்து 1998-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சிட்டி குழுமமாக உருவெடுத்தன என்கிறது வரலாறு. ஊலகின் மிகப்பெரிய நிதி சேவை கட்டமைப்பினைப் பெற்றுள்ள சிட்டி குழுமம், 140 நாடுகளில் ஏறக்குறைய 16,000 அலுவலகங்களை கொண்டுள்ளது.

 

8. சீன வேளாண்மை வங்கி

8. சீன வேளாண்மை வங்கி

சந்தை மூலதனம் : 126.41 பில்லியன் டாலர்கள்

சீன மக்கள் குடியரசில் உள்ள 4 பெரிய வங்கிகளில் மற்றும் ஒரு பெரிய வங்கியாக சீன வேளாண்மை வங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகம் பெங்ஜிங்கில் உள்ள டோங்செங் மாவட்டத்தில் உள்ளது. 320 சில்லறை வாடிக்கையாளர்கள், 2.7 மில்லியன் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் மற்றும் 24,000 கிளைகளை இந்த வங்கி கொண்டுள்ளது. சொத்துக்களைப் பொறுத்த வரையில் சீனாவின் 3-வது பெரிய கடன் வழங்கும் நிறுவனமாக இது உள்ளது.

 

9. பேங்க் ஆஃப் சைனா

9. பேங்க் ஆஃப் சைனா

சந்தை மூலதனம் : 115.92 பில்லியன் டாலர்கள்

சீன மக்கள் குடியரசுக்கு சொந்தமாக இயங்கி வரும் மிகப்பெரிய 5 கமர்சியல் வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆஃப் சைனா உள்ளது. இந்நிறுவனத்தின் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள ஜிக்செங் மாவட்டமாகும். 1912-ம் ஆண்டு இம்பீரியல் சீன வங்கியிலிருந்து குடியரசு அரசினால் இந்த வங்கி உருவாக்கப்பட்டது. சீனாவின் பழமையான வங்கிகளில் இன்றும் நடைமுறையில் உள்ள வங்கிகயாக இந்த வங்கி குறிப்பிடப்படுகிறது.

 

10. காமன்வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா

10. காமன்வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா

சந்தை மூலதனம் : 131.53 பில்லியன் டாலர்கள்

நியூசிலாந்து, பிஜி தீவுகள், ஆசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய பிரதேசங்களில் செயல்பட்டு வரும் வங்கியாக காமன்வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா உள்ளது. 22 டிசம்பர் 1911-ம் நாளில் காமன்வெல்த் வங்கி சட்டத்தின் படி இந்த வங்கி உருவாக்கப்பட்டது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Ten Largest Banks In The World 2014

Banking, in its modern sense, evolved in the 14th century in the rich cities of Renaissance Italy. In many ways, it was a continuation of ideas and concepts of credit and lending that had its roots in the ancient world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X