கணிப்புகளை தூளாக்கியது இன்போசிஸ்!! லாபத்தில் அபாரமான வளர்ச்சி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் கணிப்புகளை உடைத்து ஜூலை செப்டம்பர் மாத காலாண்டின் லாபம் சுமார் 28.6 சதவீதம் வளந்துள்ளது. மேலும் நிறுவனம் போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது இதனால் முதலீட்டாளர்கள் டபுல் சந்தோஷத்தில் உள்ளனர்.

மொத்த லாபம்

மொத்த லாபம்

2015ஆம் நிதியாண்டின் ஜூலை செப்டம்பர் மாத காலாண்டின் லாபம் 3,096 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது சுமார் 28.6 சதவீதம் அதிகமாகும். அதேபோல் கடந்த காலாண்சடை ஒப்பிடும் போது இது லாபம் 7.3 சதவீத உயர்வும், வருவாயில் 4.5 சதவீத உயர்வு பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனம 49 வாடிக்கையாளர்களுடன் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் இக்காலாகட்டத்தில் இந்நிறுவனம் புதிய வாய்ப்புகளை எட்டிப்பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீஇஓ விஷால் சிக்கா தான்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்த அறிவிப்பின் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலை 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரிஸ் பாலகிருஷ்ணன் வெளியேற்றத்தை தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்குகள் 5.4 சதவீதம் சரிந்தது குறிப்பிடதக்கது.

இந்தியாவின் முன்னணி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி நிறுவனம்

மேலும் இதேவேகத்தில் இன்போசிஸ் நிறுவனம் விழிப்புடன் செயல்பட்டால் அடுத்த சில வருடங்களில் சந்தையில் இந்நிறுவனம் சந்தையில் இழந்த நம்பிக்கை மற்றும் லாபத்தை பெறலாம்.

அதிகாரிகள் வெளியேற்றம்

அதிகாரிகள் வெளியேற்றம்

மேலும் கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று அதிகாரிகளின் வெளியேற்றம். ஆனால் 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் நிறுவனத்தின் ஊழியர்களின் வெளியேற்றம் அதிகளவில் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Q2 Profit Rises to Rs. 3,096 Crore, Shares Jump on Bonus Issue

Infosys, India’s second largest information technology (IT) services company, today cheered investors by posting a strong growth for July-September 2015 (Q2FY15), beating estimates on most fronts, as well as announcing a bonus share issue.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X