சிறப்பான வளர்ச்சியில் பெப்சி இந்தியா!! மகிழ்ச்சியில் இந்திரா நூயி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனம் இந்தியாவில் கடந்த ஒன்பது மாதத்தில் இரண்டு இலக்க வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் உலக நாடுகளுக்கு சிறப்பான வர்த்தக சாத்தியகூறுகள் உள்ளது என்பதை நிருபிக்க இது முக்கிய சாட்சியம் ஆகும்.

 

மேலும் அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடி அங்கு கூகிள், ஐபிஎம் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தார் இதில் பெப்சி நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி அவர்களும் கலந்து கொண்டார்.

இந்திரா நூயி

இந்திரா நூயி

எங்களது வர்த்தக திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. அதில் முக்கியமாக எகிப்த் மற்றும் இந்தியாவில் கடந்த வருடம் ஒரு இலக்க வளர்ச்சியில் இருந்து தற்போது இரண்டு இலக்க வளர்ச்சியாக உயர்ந்துள்ளது என இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி தெரிவித்தார்.

வளர்ச்சியில் உச்சம்

வளர்ச்சியில் உச்சம்

மேலும் இந்தியாவில் கடந்த முன்று காலாண்டுகளாக ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நாட்டில் ஆட்சி மாற்றம், உற்பத்தி பலவீனம் மற்று் செலவீனங்கள் அதிகரித்தாலும் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி சிறப்பாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

பிற நாடுகள்
 

பிற நாடுகள்

இந்தியா மட்டும் அல்லாமல் பெப்சி நிறுவனம் சீன, பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

மொத்த வளர்ச்சி

மொத்த வளர்ச்சி

2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் 3வது காலாண்டில் மட்டும் சுமார் 3.1 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.

முதலீடு

முதலீடு

இந்நிறுவனம் இந்தியாவிற்கு "ஹய் பிரியாரிட்டி மார்கெட்" என்று முத்திரை அளித்துள்ளது, இதனால் நாட்டில் வர்த்தகத்தை அதிகரிக்க இந்நிறுவனம் 2020ஆம் வருடத்திற்குள் சுமார் 33,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

இந்தியாவில் பெப்சி நிறுவனத்தின் பெப்சி, 7அப், மிராண்டா, ஸ்லைஸ், மவுன்டைன் டிவ், அக்குவாபீனா, லேஸ், மற்றும் குர்கூரே ஆகியவற்றின் விற்பனை சுமார் 1000 கோடி அளவில் உள்ளது.

தொழிற்சாலை

தொழிற்சாலை

இந்தியாவில் மட்டும் சுமார் 42 தொழிற்சாலைகள் உள்ளது. இத்தொழிற்சாலைகள் இந்தியா மட்டும் அல்லாமல் ஆசியாவின் முக்கிய நாடுகளின் தேவைகளையும் இந்நிறுவனம் பூர்த்தி செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PepsiCo's India revenue grows in double digits

PepsiCo India's revenue grew in double digits for nine months ended September 6, 2014 making the country amongst the fastest growing emerging markets for the global beverages and snack giant.
Story first published: Monday, October 13, 2014, 14:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X