இலக்கை நெருங்கிய பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம்!! 6 கோடி வங்கி கணக்குகள் துவக்கம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்தப்படி 7.5 கோடி வங்கி கணக்கு திறக்கும் ஜன் தன் யோஜனா திட்டத்தின் படி இன்றைய தினம் வரை 6.02 கோடி வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது.

 

இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் வண்ணம், பொதுத்துறை வங்கிகளின் மூலம் மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 7.5 கோடி வங்கி கணக்குகளை திறக்க வேண்டும் என்று பிரதமர் சுதந்திர தினத்தன்று பேசினார்.

முதல் நாளிலேயே அதிரடி...

முதல் நாளிலேயே அதிரடி...

மேலும் மோடியின் அறிவுறைகளின் படி, ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் இந்திய பொதுத்துறை வங்கிகள் முதல் நாளிலேயே சுமார் 1.5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தில் 7.5 கோடி வங்கிகணக்குள் துவங்குவதற்கு ஜனவரி 26ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

ஆதார் எண்

ஆதார் எண்

மேலும் இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக திறக்கப்பட்ட வங்கி கணக்கு அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிலிண்டர் மானியம்..
 

சிலிண்டர் மானியம்..

தற்போது ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு திறந்திருக்கும் அனைவருக்கும் இக்கணக்கில் மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மாணியம் இணைக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ரூபே

ரூபே

மேலும் இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்கும் நபர்கள் அனைவருக்கும் மத்திய அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேமெண்ட் திட்டமான ரூபே சேவை இணைத்த டெபிட் கார்டு வழங்கப்பட உள்ளது. பொதுவாக உலக நாடகள் பொரும் பகுதியினர் அமெரிக்காவில் விசா மற்றும் மாஸ்டார்கார்டு போன்ற பேமெண்ட் கேட்வே மட்டுமே நம்பியுள்ளது. இதன் ஆதிக்கத்தை குறைகவே மத்திய அரசு இத்திட்டத்தை துவங்கி மக்கள் மத்தியில் புழக்கத்திற்காக விட்டுள்ளது மத்திய அரசு.

விபத்து காப்பீடு

விபத்து காப்பீடு

மேலும் இத்திட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் 1 இலட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.

அதிகப்பற்று

அதிகப்பற்று

மேலும் இக்கணக்கு துவங்கி ஆறு மாதத்திற்கு பிறகு கணக்காளர்கள் 5000 ரூபாய் அளவு அதிகப்பற்று overdraft எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6.02 cr bank accounts opened under Jan Dhan scheme

Over six crore bank accounts have been opened so far under the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY), finance minister Arun Jaitley said today.
Story first published: Monday, October 20, 2014, 13:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X