பாகிஸ்தான் சந்தையில் 26% அன்னிய முதலீடு சரிவு!! சீனா, அரபு நாடுகள் கைவிட்டன...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கராச்சி: இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளில் தொடர்ந்து அன்னிய முதலீட்டு அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் மட்டும் சுமார் அன்னிய முதலீட்டுக்கான அளவு சுமார் 26 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் நிலவும் அரசின் நிலையற்ற தன்மை மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் காரணணாக பாகிஸ்தானில் அதிகம் முதலீடும் செய்யும் சீனா மற்றும் அரபு நாடுகளும் கூட தங்களது முதலீட்டை குறைக்க துவங்கியுள்ளது.

 

கராச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூலை- செப்டம்பர் மாத காலகட்டங்களில் பாகிஸ்தானில் அன்னிய முதலீடு அதிகளவில் குறைந்துள்ளதாக தெரிவித்திள்ளது. இதன் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 26 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடதக்கது.

அண்டை நாடுகள்

அண்டை நாடுகள்

அன்னிய முதலீடு குறைந்ததை குறித்து சந்தை முதலிட்டு வல்லுனர் இன்டிகாப் அலி கூறுகையில்,"இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சீனா அகிய அண்டை நாடுகளை ஒப்பிடுகையில் பாகிஸ்தானில் அன்னிய முதலீடு மிகவும் குறைவு" என அவர் தெரிவித்தார்.

முதலீடு

முதலீடு

ஜூலை- செப்டம்பர் மாத காலகட்டங்களில் பாகிஸ்தான் சந்தையில் வெறும் 169 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு.

நவாஸ் ஷெரீப்

நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அன்னிய முதலீட்டை கவர்வதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை, சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஆனால் அன்னிய முதலிடு அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் எதுவும் தெரிவில்லை.

டேக்கா கொடுத்த சீனா..
 

டேக்கா கொடுத்த சீனா..

நடப்பு நிதியாண்டில் இச்சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் சீனா மற்றும் சவுதி அரபிய நாடுகள் 3.9 மில்லியன் டாலர் மற்றும் 14.6 மில்லியன் டாலர் அளவு முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

அமெரிக்கா மற்றும் ஹாங்காங்

அமெரிக்கா மற்றும் ஹாங்காங்

மேலும் இக்காலாண்டில் அதிகளவில் முதலீடு பெற்று ஐரோப்பியா, அமெரிக்கா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் தான். இதில் 36.6 பில்லியன் டாலர் ஐரோப்பிய நாடுகளும், 41.5 மில்லியன் டாலர் அமெரிக்காவும், 43 மில்லியன் டாலர் ஹாங்காங் முதலீடு செய்துள்ளது.

10 வருடம்

10 வருடம்

மேலும் கடந்த 10 வருட லத்தில் அதிகளவில் அன்னிய முதலீடு குறைந்ததுள்ளது, இதனால் உலக சந்தைகளில் பாகிஸ்தான் நாட்டின் மீதள்ள மதிப்பு சரியும் வண்ணம் உள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீடு அதிகளவில் குறைந்துள்ளதால் டாலருக்கு எதிரான் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சுமார் 103 மேல் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan FDI declines by 26 pc in FYQ2

Foreign investors shied away from investing in Pakistan as FDI fell by 26 per cent in the quarter of July to September this fiscal year, official figures showed.
Story first published: Monday, October 20, 2014, 12:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X