ரூ.56 கோடி நஷ்டத்தில் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: கிங்பிஷர் நிறுவனத்தின் நஷடத்தில் இன்னும் மீளமுடியாத விஜய் மல்லையா, தான் தலைமை வகிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இந்நிறுவனம் சுமார் 55.56 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

வங்கிகள் விஜய் மல்லையாவை நாணயமற்றவர் என்று அறிவித்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த அறிவிப்புக்கு தடையும் பெற்றுள்ளார்.

நஷ்டம்

நஷ்டம்

முதல் காலாண்டில் இந்நிறுவநம் பெற்ற 56 கோடி ரூபாய் நஷ்டத்தில் 42.79 கோடி ரூபாய் இந்நிறுவனத்தின் கிளை பிராண்டான வொய்டி & மெக்கே விற்பனையில் சந்தித்தது குறிப்பிடதக்கது.

பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு 118.13 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது, மேலும் இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10.90 சதவீதம் குறைந்து 1923.90 ரூபாயாக உள்ளது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 15.15 புள்ளிகள் சரிந்து 2538.05 ஆக விற்கப்படுகிறது.

டியாஜியோ

டியாஜியோ

மேலும் இந்நிறுவனத்தில் அதிகளவு பங்குகளை கொண்ட டியாஜியோ நிறுனவனம் இந்தியாவில் ஸ்மிரின்ஆஃப் வோட்கா தனிப்பட்ட முறையில் விற்க துவங்கியுள்ளது. அதே போல் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் ஆந்திரா மற்றும் கேரளா மாநில விற்பனை உரிமையை டியாஜியோ நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

நிறுவன பணத்தில் முறைகேடு

நிறுவன பணத்தில் முறைகேடு

டியாஜியோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்த முதலீட்டு பணத்தில் நிறுவனங்களுக்கும் முறைகேடாக கடனகளை அளித்தாக டியாஜியோ நிறுவனம் விஜய் மல்லையா மீது குற்றம்சாட்டியது, இதற்காக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

மீண்டும் தலைவர்

மீண்டும் தலைவர்

இத்தகைய சூழ்நிலையில் விஜய் மல்லையா மீண்டும் நவம்பர் 29ஆம் தேதி நிறுவன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

United Spirits posts ₹56-cr net loss in Q1

United Spirits has posted a ₹55.56-crore net loss for the first quarter of the financial year because of a provision of ₹42.79 crore related to the sale of its subsidiary Whyte & Mackay.
Story first published: Tuesday, October 21, 2014, 13:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X