இந்தியாவில் அன்னிய முதலீடு ரூ.2.10 லட்சம் கோடியாக உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் சிறப்பான திட்டங்களால் இந்திய சந்தையில் இம்மாதம் சுமார் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் இந்திய சந்தையில் 35 பில்லியன் டாலர் வரை அன்னிய முதலீடாக பெற்றப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் வளர்ச்சி மிகுந்த திட்டங்கள் மற்றும் முக்கிய துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான அளவீடுகளை அதிகரித்தல் போன்றவையே ஆகும்.

இதில் கடன் சந்தையில் 12,645 கோடி ரூபாய் (2.06 பில்லியன் டாலர்) அக்டோபர் 1-22ஆம் தேதியின் இடைப்பட்ட காலகட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பங்கு சந்தையில் இருந்து 3500 திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடதக்கது.

முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும்...

முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும்...

சந்தை வல்லுனர்களின் படி இந்திய சந்தைகளில் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து அன்னிய முதலீடு அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளது. அது அன்னிய முதலீடு அதிகரிக்க கண்டிப்பாக உதவும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

மேலும் மத்திய அரசு பெர்ரோல் மற்றும் டீசல் விலை கணக்கீடு மற்றும் விலை குறைப்பு பற்றி பேச்சுவார்த்தையில் உள்ளது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு இவ்விலை குறைப்பு உந்து சக்தியாக இருக்கும். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அன்னிய முதலீடு அக்டோபர் மாதத்தை விட அதிகளவில் இருக்கும் என கணிப்புகல் தெரிவிக்கிறது.

நிலக்கரி சுரங்க உரிமங்கள்

நிலக்கரி சுரங்க உரிமங்கள்

214 நிலக்கரி உரிமங்களை மத்திய மின்னணு ஏலத்தின் மூலம் வழங்க உள்ளது. இதன் மூலம் நாட்டின் மின்சார உற்பத்தி மற்றும் டிரான்ஸ்மிஷன் துறையில் அதிகப்படியான முதலீட்டை எதிர்பாக்க முடியும்.

மொத்த முதலீடு

மொத்த முதலீடு

2014ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்திய பங்குச் சந்தையில் 79,938 கோடி ரூபாய் மற்றும் கடன் சந்தையில் 1.3 இலட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இவ்வருடம் அன்னிய முதலீடாக இந்திய சந்தையில் குவிந்துள்ள பணம் 2.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

1991ஆம் ஆண்டு முதல்

1991ஆம் ஆண்டு முதல்

இந்திய சந்தையில் 1991ஆம் ஆண்டு முதல் சுமார் 10 இலட்சம கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2014ஆம் ஆண்டு மட்டும் சுமார் 2.10 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது, நடப்பு நிதியாண்டின் முதலீட்டு அளவு மேலும் அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FPI inflows hit $1.5 billion in Oct; reaches $35 billion in 2014

Continuing to bet big on the government's reforms agenda, overseas investors have poured in $1.5 billion in the Indian market so far this month taking the total inflow to $35 billion since January. 
Story first published: Monday, October 27, 2014, 16:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X