கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு மன்னிப்பு!! நிதியமைச்சகம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுவிஸ் ஹெச்.எஸ்.பி.சி ஹோல்டிங்ஸ் வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருந்த 100 இந்திய பணக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஜெனீவாவில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து வரிகளை செலுத்தும் பட்சத்தில் அவர்களின் மீது கிரிமனல் வழக்குகள் அல்லது அபராதங்கள் என எதுவும் விதிக்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை இன்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு சமர்ப்பிக்கிறது.

பட்டியல் வெளியீடு

பட்டியல் வெளியீடு

இப்பட்டியலில் முக்கிய இடங்களை பிடித்திருபது டாபர் நிறுவன இயக்குனர் பிரதீப் பர்மன், குஜராத்தை சேர்ந்த பங்கு வர்த்தகர் பங்கஜ் சமன்லால் லோதியா, மற்றும் கோவாவை சேர்ந்த கனிம சுரங்க அதிபர் ராதா டிம்போலா ஆகியோர் ஆவார்.

பிரட்டன் அமெரிக்காவுடன் கூட்டு

பிரட்டன் அமெரிக்காவுடன் கூட்டு

இந்தியா, பிரட்டன் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணக்காரர்கள் வெளிநாடுகளில் பணம் வைத்துள்ள தகவல்களை தெரிவிக்காதவர்களின் மீது பண சலவை மற்றும் வரி ஏய்ப்பு போன்ற சட்டங்களின் மூலம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் பிரட்டன மில்லியனர் தான் சுவிஸ் ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளதை கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.

700 இந்தியர்கள்
 

700 இந்தியர்கள்

ஜெனீவாவின் ஹெச்.எஸ்.பி.சி ஹோல்டிங்ஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த 700 இந்தியர்களின் பெயரை பிரஞ்சு அமைப்புகள் தெற்கு ஆசிய நாடுகளின் அமைச்சகத்திடம் கொடுத்தாது. இதனை கொண்டு மத்திய அரசு அவர்களின் விசாரணை தற்போது நடத்தி வருகிறது. மேலும் இவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

நடைமுறைக்கேற்ற திட்டம்

நடைமுறைக்கேற்ற திட்டம்

உலக நாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வருவது சிறந்த முயற்சி, தண்டனையில் பேரில் இச்செயல்பாட்டை தடுப்பது முற்றிலும் தவறான செயல் என்று டாரஸ் செத்து நிர்வாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.குப்தா தெரிவித்தார்.

700 பேரும் தவறிழைத்தவர்களா???

700 பேரும் தவறிழைத்தவர்களா???

வங்கிகள் வெளியிட்ட 700 பேரும் தவறிழைத்தவர்களா என்ற கேள்விக்கு நிதியமைச்சகம் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய நேரடி வரித்துறை, அவை விசாரணைக்கு பின் தான் முடிவு செய்யப்பட்டும் என தெரிவித்தது என் சன்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

பதில் அளிக்க மறுப்பு

பதில் அளிக்க மறுப்பு

கருப்பு பணம் பற்றி பேசுவதற்காக மத்திய நேரடி வரித்துறையில் செய்திதொடர்பாளர் அனுஜா முன்று முறை அழைத்த போதும் பதில் அளிக்கவில்லை என்றும், இத்துறையின் தலைவர் லக்ஷ்மன் தாஸ் அவர்களுக்கு முன்று மின்னஞசல் அனுப்பியும் பதில் தெரிவிக்கவில்லை என்றும். ஹெச்.எஸ்.பி.சி வங்கிகயின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் அவர்களும் இது குறித்து பதில் அளிக்க மறுத்து விட்டார் என சன்டே டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தகவல் வெளியானது எப்படி???

தகவல் வெளியானது எப்படி???

பிரான்ஸ் அமைப்பு இத்தகவலை ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் ஊழியரான Herve Falciani, வங்கியின் சுமார் 24,000 முன்னாள் மற்றும் தற்போதைய கணக்காளர்களின் விபரங்களை திருடினார் அளித்தார் என லண்டனை சேர்ந்த ஒரு அமைப்பு தெரிவித்தது. இதை கொண்டு இத்தாலி மற்றும் யூ.கே நாடுகள் விசாரணையை துவங்கியது. இதில் தான் இந்தியாவின் 700 பேர் கொண்ட தகவல் வெளியானது.

கருப்பு பணம்

கருப்பு பணம்

இந்தியா வருடத்திற்கு 250 பில்லியன் டாலர் (14 டிரில்லியன் டாலர்) வரி பணக்கை இழக்கிற்து என்றும் இதனை கொண்டு இந்தியாவில் சிறந்த சாலை, துறைமுகங்கள் மற்றும் மின் உற்பத்தி ஆலைகள் உருவாக்க முடியும் என தி பிலாக் மனி இன் இந்தியா என்ற புத்தக்த்தில் அருண் குமார் தெரிவித்துள்ளார். தற்போது மத்திய அரசு வசூலிக்கும் வரி பணம் வெறும் 9.3 டிரில்லியன் டால்ர் மட்டும் தான்.

500 பில்லியன் டாலர்

500 பில்லியன் டாலர்

மேலும் இந்தியார்கள் பணம் முறைகேடாக வெளிநாடுகளில் சுமார் 500 பில்லியன் டாலர் உள்ளது இதை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றனம் 2011ஆம் வருடம் 2011ஆம் ஆண்டு அறிவித்தது.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இது குறித்த வழக்கு இருவாரஙகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அதில் விபரங்களை வெளியிட முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதன் விசாரணையை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று இதற்கான விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளர்.

3 பேர்

3 பேர்

மேலும் கருப்பு பணம் வைத்துள்ளவர்களில் 3 பேர் பெயரை வெளியிட்டுள்ளது மத்திய நிதியமைச்சகம். டாபர் நிறுவன இயக்குனர் பிரதீப் பர்மன், குஜராத்தை சேர்ந்த பங்கு வர்த்தகர் பங்கஜ் சமன்லால் லோதியா, மற்றும் கோவாவை சேர்ந்த கனிம சுரங்க அதிபர் ராதா டிம்போலா. இதில் இப்பட்டியலில் அரசியல்வாதிகள் பெயர்கள் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HSBC Account Holders Offered India Amnesty, Official Says

India has offered amnesty to more than 100 wealthy citizens who evaded taxes by hiding funds in accounts at HSBC Holdings Plc (HSBA)’s Swiss unit, according to a government official with knowledge of the matter.
Story first published: Monday, October 27, 2014, 11:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X