70 கோடி இந்திய மக்களை சென்றடைந்த ஆதார் அடையாள அட்டை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இதுவரை 70 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் படி இன்னும் 34 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது என UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதார் எண் என்பது வெறும் 12 இலக்க எண் மட்டும் அல்லாமல் இதில் பயோமெட்ரிக் அடையளங்கள் (கண் கருவிழியின் அமைப்பு அல்லது கைவிரல் ரேகை) ஆகியவை அடங்கும் இதன் மூலம் இந்த அடையாளம் இந்த குடிமக்கள் ஒவ்வருக்கும் தனிப்பட்டவையாக இருக்கும்.

முதலீடு

முதலீடு

இத்திட்டதிற்கு மத்திய அரசு இதுவரை 5000 கோடிக்கு அதிகமாக பணத்தை முதலீடு செய்துள்ளது. இத்திட்ட துவக்கத்தில் மத்திய அரசு நந்தன் நிலகேனி அவர்களின் தலைமையிலான் குழுவிற்கு சுமார் 3500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில் 70 கோடி ஆதார் எண்களை விநியோகம் செய்தது. அதன் பின் மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு இத்திட்ட மேம்பாட்டிற்கும் விநியோகத்திற்கும் மேலும் 2039 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

திட்ட கமிஷன்

திட்ட கமிஷன்

மேலும் ஆதார் எண் வழக்கும் திட்டமான UIDAI திட்டம் மத்திய திட்ட கமிஷன் குழுவின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்குழவிற்கு தற்போது விஜய் எஸ் மதன் தலைவராக இருக்கிறார்.

90 சதவீதம் பணிகள் முடிந்தது

90 சதவீதம் பணிகள் முடிந்தது

மத்திய வெளியிட்ட அறிக்கையின் இந்தியாவில் ஆந்திர பிரதேசம், கேரளா, டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் உட்பட 9 மாநிலங்களில் ஆதார் எண் வழக்கும் பணிகள் 90 சதவீதம் அளவு முடிந்தது. இதேபோல் இதர 16 மாநிலங்கள் 70 சதவீத பணிகள் முடிவடைந்தது எனவும் தெரிவித்துள்ளது.

4 மாநிலங்கள்

4 மாநிலங்கள்

மேலும் உத்தரப் பிரதேசம், பிகார், உத்தரகண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 34 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கும் திட்டம் துவங்கியுள்ளது இதுவரை இப்பகுதிகளில் சுமார் 8.93 கோடி மக்களுக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பு

இணைப்பு

மேலும் தற்போது மத்திய அரசு ஆதார் எண்னை ஜன் தன் யோஜானா திட்டம், ஒய்வுதியம், உதவி தொகைகள், நேரடி பரிமாற்ற, ரேஷன், பாஸ்போட், அரசு அதிகாரிகளின் வருகை அமைப்பு, போன்ற பல இடங்களில் இணைத்து வருகிறது இதன் மூலம் நாட்டின் மக்களை ஒன்றினைக்கும் திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு மக்களுக்கு பயன்பாடும் வகையில் புதிய மற்றும் தெளிவான திட்டங்ளை தீட்ட முடியும்.

அடையாளம்

அடையாளம்

தற்போது நாட்டில் பாஸ்போட், வாக்காளர் அட்டை, போன்று ஆதார் எண்ணும் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகை 126 கோடியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadhaar numbers reach 70-cr mark

Over half of India’s population now has a unique identification or Aadhaar number. The Government has announced that the Unique Identification Authority of India (UIDAI) had issued 70 crore Aadhaar numbers, as on Tuesday.
Story first published: Wednesday, October 29, 2014, 12:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X