பணியாளர்கள் வெளியேற்றத்தை தடுக்க முடியாமல் தவிக்கும் இன்போசிஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான பணியாளர்கள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பொதுவாக ஐடித் துறையில் பணியாளர்களின் வெளியேற்றம் சாதரணமாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருவதாக கருத்து நிலவி வருகிறது. இதனால் பணியாளர்கள் வெளியேற்றத்தை குறைக்க இன்போசிஸ் கடுமையாக முயற்சித்து வருகிறது. இதற்காக பல திட்டங்களையும் தீட்டி வருகிறது.

ஜூன் மாதம்....

ஜூன் மாதம்....

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது நிலவும் அதிகப்படியான பணியாளர்கள் வெளியேற்றத்தை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெரிதும் உதவி வருவதாக தலைமை செயல் அதிகாரியான யுபி பிரவின் ராவ் தெரிவித்தார்.

நிறுவன வளர்ச்சி திட்டங்கள்

நிறுவன வளர்ச்சி திட்டங்கள்

இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களில், பணியாளர்கள் வெளியேற்றத்தை குறைப்பும் முக்கியமான ஒன்றாகும். மேலும் சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றும் மிகவும் அதிகமாகும்.

20.1 சதவீதம்

20.1 சதவீதம்

2014ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவின் போது இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்ற வகிதம் 20.1 ஆக இருந்தது. இதுவே விப்ரோ நிறுவனத்தின் அளவு 17 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 12.8 சதவீதமாக உள்ளது.

பணியாளர்களுக்கு போனஸ்

பணியாளர்களுக்கு போனஸ்

திறன்வாய்ந்த பணியாளர்களை நிறுவனத்தில் வெளியேறாமல் தடுக்க இன்போசிஸ் நிறுவனம் ஜூன் செப்டமபர் காலாண்டிற்கு 100 சதவீத போனஸ் கொடுத்தது.

பதவி உயர்வு

பதவி உயர்வு

மேலும் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நிறுவனத்துடன் இணைத்திடவும் 19,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

13-15 சதவீதம்

13-15 சதவீதம்

மேலும் சில முக்கிய திட்டங்கள் மற்றும் புதிய பிராஜெக்ட் மூலம் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றத்தை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 13-15 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது இன்போசிஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys steps up efforts to lower attrition rate by next year

Infosys expects to lower staff attrition sharply as early as June next year, thanks largely to measures taken to engage with employees by new boss Vishal Sikka.
Story first published: Tuesday, November 4, 2014, 13:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X