"அல் கொய்தா" தாக்குதலுக்கு பின் மீண்டும் உயிர் பெற்ற "வோல்டு டிரேட் சென்டர்"!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: கடந்த 2001ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தில் நடத்திய தாக்குதலில், இக்கட்டிடம் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த நிகழ்வு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை அதிகளவில் பாதித்தது.

13 வருடத்திற்கு பிறகு வோல்டு டிரேட் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த இரட்டை கோபுர கட்டிடத்தில் ஒன்று மட்டும் உயிர் பெற்று தற்போது வர்த்தகத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

முதல் நாள்

முதல் நாள்

இக்கட்டிடத்தை இன்று வர்த்தகத்திற்காக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் துறைமுக ஆணையத்தின் தலைவர் பேட்ரிக் போயி திறந்து வைத்தார். முதல் நாளான இன்று இக்கட்டிடத்தில் சுமார் 175 பணியாட்கள் பணியாற்றினர். இச்சம்பவத்திற்கு முன்பு, இக்கட்டிடத்தை டிவின் டவர்ஸ் என்று அழைக்கப்பட்டது, ஆனால் இப்போது இதை "ஒன் வோல்டு டிரேட் சென்டர்" என்று அழைக்கப்படுகிறது.

நினைவு கூடம்

நினைவு கூடம்

இந்த 1,776 அடி உயரம், 104 மாடிகள் கொண்ட இக்கட்டித்தின் அருகில், தாக்குதலின் போது கட்டிட இடிபாடில் சிக்கி உயிர் இழந்த 2,700 மக்களின் நினைவாக ஒரு நினைவுக்கூடம் கட்டப்பட்டு உள்ளது.

3,000 பணியாளர்கள்

3,000 பணியாளர்கள்

கான்டி நாஸ்ட், வோக் பத்திரிக்கை நிறுவனம், தி நியூயார்கர் மற்றும் வேனிடி ஃபர் ஆகிய நிறுவனங்கள் 3,000 பணியாளர்களுடன் முதல் 25 மாடிகளை அடுத்த வருடத்திற்குள் பெறுவர்.

பயம்

பயம்

மேலும் கான்டி நாஸ்ட் தனிப்பட்ட முறையில் கூறுகையில், மீண்டும் இக்கட்டிடத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்கக்கூடுமோ என்று அஞ்சி இடமாற்றம் செய்ய தயங்குகிறது. ஆனால் பிற நிறுவனங்கள் இக்கட்டிடத்தை மிகவும் பாதுகாப்பானவை என்று கருத்து தெரிவித்து வருகிறது.

மக்கள் தொகை அதிகம்...

மக்கள் தொகை அதிகம்...

9/11 அன்று நடத்த சம்பவத்தை ஒப்பிடுகையில் இப்பகுதியில் மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. கட்டிட வளாகத்தை சுற்றி சுமார் 60,000 மக்கள் வசித்து வருகின்றனர்.

தீவிரவாதம் வோண்டாம்..

தீவிரவாதம் வோண்டாம்..

அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகின் எந்த ஒரு பகுதிகளிலும் இனி தீவிரவாதம் நடக்கக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்வோம். மேலும் இத்தகைய தீய செயலை அடியோடு ஒழிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Trade Center reopens for business 13 years after 9/11 terror attacks

The silvery skyscraper that rose from the ashes of the September 11, 2001 terror attacks to become a symbol of American resilience has opened for business, as 175 employees of the magazine publishing giant Conde Nast settled into their first day of work there.
Story first published: Tuesday, November 4, 2014, 17:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X