ரஷ்யாவுடன் இணையும் "மேக் இன் இந்தியா" திட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் ரஷ்யாவின் ஈஸ்டன் பிவாட் திட்டத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இதில் மின்சார உற்பத்தி, ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பைடர் விமானங்களை உருவாக்குதல் மற்றும் அணு சக்தி ஒப்பந்தம் போன்ற திட்டங்களில் இந்தியா ரஷ்யாவுடன் இணைய உள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் துணை பிரதமர் ரோகோஜின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

ஒரு நாள் பயனம்

ஒரு நாள் பயனம்

ரஷ்யாவின் துணை பிரதமர் ரோகோஜின் அவர்கள் ஒரு நாள் பயணமாக இந்தியாவிற்கு புதன்கிழமை வருகிறார். டெல்லியில் நடக்கும் 20வது IRIGC-TEC கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ரோகோஜின் அவர்கள் தலைமை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் முடிவில் இந்தியாவிற்கு எந்தெந்த துறையில் ரஷ்யா உதவி செய்யும் என்பதை பற்றி பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிகிறது.

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு

மேலும் டெல்லியில், டிசம்பர் மாதம் நடைபெறும் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வருகிறார். இந்த மாநாட்டில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கு மேக் இன் இந்தியா திட்டத்தில் பல திட்டங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் பல ரஷ்ய தனியார் நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்களும் நடைபெரும்.

செர்கே லாவ்ரோவ்
 

செர்கே லாவ்ரோவ்

மேலும் நவம்பர் மாத இறுதியில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இந்தியா வருகிறார். இச்சந்திப்பில் பாதுக்காப்பு துறையில் உற்பத்தியில் இருந்து அணுசக்தி முதல் விண்வெளி ஆராய்ச்சி வரையில் ரஷ்யாவுடழ் கைகோர்க்க திட்டமிட்டுள்ளது இந்தியா. இதனால் ரோகோஜின் அவர்களின் இந்த பயனம் அதி முக்கியமாகவும் இத்திட்டத்திற்கு துவக்க புள்ளியாகவும் அமைய உள்ளது.

விமான உற்பத்தி

விமான உற்பத்தி

ஐந்தாம் தலைமுறை போர் விமான உற்பத்தியை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இதில் இந்தியாவின் முதலீடு மட்டும் 6 பில்லியன் டாலர். இந்த ஒப்பந்தம் 2007ஆம் செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு

2015ஆம் ஆண்டு

மேலும் கடந்த திங்கட்கிழமை ரஷ்யாவின் ஒரு குழு 200 சுகோய் 30 ரக விமானங்களை மேர்பார்வை செய்தது. இந்த விமானங்கள் 2015ஆம் ஆண்டிற்குள் இந்திய ரானுவத்தில் இணைக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘Make in India' meets Russia's ‘Eastern pivot'

The government’s “Make in India” programme and Russia’s “Eastern pivot” will meet as Russian Deputy Prime Minister Rogozin will discuss more cooperation on energy, the co-production of fighter aircraft and nuclear cooperation with india's higher officials.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X