அனைவருக்கும் மருத்துவ காப்பீடு!! பிரதமர் மோடியின் அடுத்த திட்டம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ காப்பீடு அளிக்க மத்திய அரசு நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் வருகிற 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டத்தை மேம்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

சுகாதார அமைச்சகம்

சுகாதார அமைச்சகம்

ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் தற்போது தொழிலாளர் அமைச்சகத்திலன் கட்டுப்பாட்டில் உள்ளது இதனை சுகாதார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டு புதிய திட்டம் செயல்பட உள்ளது. அதன்படி அனைவருக்குமான தேசிய சுகாதார உறுதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வரையறை செய்ய சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டத்தில் புதிய அம்சங்களை சேர்த்து அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டத்தை வரையறைகளை மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டம்

நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டம்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆர்எஸ்பிஒய்ஐ தொழிலாளர் அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் தேசிய சுகாதார உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது. பின்பு இரண்டையும் இணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவுறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கியமானவை

முக்கியமானவை

அனைவருக்குமான காப்பீடு திட்டம் 50 அத்தியாவசிய மருந்துகள், முக்கிய பரிசோதனைகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட 30 மாற்று மருந்துகளை சலுகை விலையில் பெற வழிவகுக்கும். இவை ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கும். மற்றவர்கள் சிறு தொகையை செலுத்தி சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெறலாம்.

ஐக்கிய முற்போக்கு கட்சி

ஐக்கிய முற்போக்கு கட்சி

நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டத்திற்கு அடித்தளமாக விளங்கும் ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் ஐக்கிய முற்போக்கு கட்சி ஏப்ரல் 2008ஆம் ஆண்டும் துவங்கியது. இதன்மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு சுமார் 30,000 அளவிற்கு ஸ்மார்ட்கார்டு முறையில் மருத்துவ உதவிகள் கிடைத்தது வந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Health insurance for all likely in January

The government is likely to roll out its much touted National Health Assurance Mission (NAHM) in January, promising health insurance for all.
Story first published: Monday, November 24, 2014, 11:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X