ரிசர்வ் வங்கியின் பெயரில் நூதன மோசடி!! உஷார்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு நூதன திருட்டு செயல் எது என்பது உங்களுக்கு தெரியுமா?? ரிசர்வ் வங்கி அளிக்கும் கிரேடிட் கார்டு தான்.

 

இந்தியாவில் பல இடங்களில் ஒரு மோசடி கும்பல் ரிசர்வ் வங்கி அளிக்கும் கிரேடிட் கார்டு அளிப்பதாக மக்களிடம் நூதன மூறையில் பெரும் அளவிலான பணத்தை பறித்து வருகிறது. அதுகுறித்து ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது.

ரிசர்வ் பாங்கு ஆஃப் இந்தியா

ரிசர்வ் பாங்கு ஆஃப் இந்தியா

ரிசர்வ் வங்கி பெயரில் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என வரும் போலியான அழைப்புகளை நம்பவேண்டாம் என்றும், இது ஒரு மோசடி கும்பலின் ஏமாற்று வேலை என்றும் பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதுக்குறித்து தகவல் கிடைத்தால் காவல் துறையிடம் உடனடியாக புகார் அளிக்கும்படியும் ரிசர்வ் வங்கிக் கேட்டுக்கொண்டது.

போலியான கிரேடிட் கார்டு

போலியான கிரேடிட் கார்டு

ரிசர்வ் வங்கி பெயரில் ஒரு மோசடி கும்பல் போலியாக அச்சிடப்பட்ட கிரெடிட் கார்டுகளை தயாரித்து அவற்றை பொது மக்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி விற்று வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததால் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு இந்த மோசடி வந்துள்ளது.

செயல்முறை
 

செயல்முறை

அந்த போலியான மோசடி கார்டு வழங்கப்பட்ட பிறகு குறிப்பிடப்படும் வங்கி கணக்கு ஒன்றில் இருந்து கடனாக பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இப்படி பணம் எடுத்ததும், கார்டை வாங்கி பயன்படுத்துபவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது.

நம்பிக்கையின் விபரீதம்

நம்பிக்கையின் விபரீதம்

இதை சாதமாக பயன்படுத்தி கொண்டு, அந்த நபரை தொடர்பு கொண்டு அதே கணக்கில் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யும்படி கூறுகின்றனர். அப்படி தொகையை டெபாசிட் செய்ததும் உடனடியாக அந்த கார்டை செயலிழக்க செய்து விடுகின்றனர். இதையடுத்து அந்த ரொக்கத்தை மோசடி கும்பல் எடுத்து விடுகின்றனர். ஏமாளிகள் உள்ள வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.

தனிநபர் வர்த்தகம்

தனிநபர் வர்த்தகம்

ரிசர்வ் வங்கி இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளுக்கும் தலைமையான வங்கி, இவ்வங்கு வங்கிகளுடனும், மத்திய அரசுடன் மட்டுமே இணைந்து செயல்படும். எனவே ரிசர்வ் வங்கி எந்த ஒரு தனிநபர் வர்த்தகத்திலும் ஈடுப்படாது என்பதை மக்கள் புரிந்துக்கொள்வேண்டும், மேலும் இத்தகைய மோசடி குறித்து தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

எனவே, ரிசர்வ் வங்கி பெயரில் கிரெடிட் கார்டு வழங்குகிறோம் என்று ஏதேனும் அழைப்பு வந்தால் அவற்றை நம்பி பணத்தை பறிகொடுத்து ஏமாற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிற மோசடிகள்

பிற மோசடிகள்

மேலும் ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), வருமான வரித்துறை, சங்கத்துறை, மற்றும் பிரபலங்களின் பெயரில் வரும் திட்டங்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI Issues Clarification on fraudulent Credit Cards

Credit cards issued by the Reserve Bank of India! Yes, that's the latest trick fraudsters are using to dupe hapless people, the central bank has found recently.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X