15 புதிய விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா அடுத்த 10 வருடங்களில் உலகளவில் மிகப்பெரிய உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை கொண்ட நாடாக உருவெடுக்கும் என பல ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள இந்தியாவில் சுமார் 205 குறு, சிறு மற்றும் பெரு விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

 

இதில் 15 புதிய கிரீன்பீல்ட் விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

மகேஷ் சர்மா

மகேஷ் சர்மா

புதிய விமான நிலையங்களில் பொருபாலானவை விமான நிலையங்களை இல்லாத இடங்களில் மட்டுமே அமைக்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன்படி இந்த 15 விமான நிலையங்களு மேற்கு இந்தியாவில் அமைய உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

முக்கிய பணிகள்

முக்கிய பணிகள்

15 புதிய கிரீன்பீல்ட் விமான நிலையங்களை அமைக்க நிலம் கையகப்படுத்துவது, தேவையான துறைகளிடம் ஒப்பதல் பெற்றப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாது நிதி திரட்டுவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விமான நிலைய உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

புதிய விமான நிலையங்கள்

புதிய விமான நிலையங்கள்

இந்தியாவில் மோபா, நவி மும்பை, ஷிர்டி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் புதிய கிரீன்பீல்ட் விமான நிலையங்கள் அமைய உள்ளதாக அவர் கூறினார்.

132 விமான நிலையங்கள்
 

132 விமான நிலையங்கள்

விமான பயணிகள் போக்குவரத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் டாப் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில் நாட்டில் சுமார் 132 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் 46 உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் 15 சர்வதேச விமான நிலையங்களை இந்திய விமான ஆணையம் (ஏஏஐ) நிர்வகிக்கிறது. இதில் சிலவற்றை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டப்பாட்டிற்கு கீழ் உள்ளது.

ராணுவம்

ராணுவம்

மேலும் 132 விமான நிலையங்களில் 31 விமான நிலையங்கள் செயல் படுத்தப்படாமல் உள்ளன. மற்றவை ராணுவ மற்றும் சுங்கத்துறையால் செயல்படுத்தப்படும் விமான நிலையங்களாகும். இவற்றில் மாநில மற்றும் யூனியன் அரசுகள் நிர்வகிக்கும் 6 விமான நிலையங்களும் அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 new greenfield airports to be developed: Minister

The government said Tuesday it has granted in principle approval for setting up of 15 greenfield airports.
Story first published: Wednesday, November 26, 2014, 16:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X