பிளிப்கார்ட் நிறுவன இணைப்பால் ஒரு வருடத்தில் 280 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்!! இந்திய தபால் துறை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் தற்போது ஈகாமர்ஸ் துறையில் பல நிறுவனங்கள் குவிந்துள்ள நிலையில், இவர்களுக்கு முக்கிய பிரச்சனையாக விளங்குவது வாடிக்கையாளர்களுக்கு செய்யும் டெலிவரிதான். இந்த டெலிவரி பிரச்சனையை களைய இந்திய தபால் துறை ஈகாமர்ஸ் துறை நிறுவனங்களுக்கு கைகொடுத்தது.

 

இந்திய தபால் துறை சில முக்கிய நிறுவனங்களுக்கு மட்டும் இத்தகைய சேவையை வழங்கி வருகிறது, அதில் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்கள் அடக்கம். இத்தகைய சேவையை துவங்கி 1 வருட காலத்தில் சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை தபால் துறை செய்துள்ளது.

 கேஷ் ஆன் டெலிவரி

கேஷ் ஆன் டெலிவரி

ஈகாமர்ஸ் நிறுவனங்களின் மிகுந்த நம்பிக்கை உடைய கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை இந்நிறுவனங்கள் தபால் துறையுடன் இணைந்து இந்தியாவின் சில முக்கிய பகுதிகளில் மட்டும் துவங்கியுள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

மேலும் இந்திய தபால் துறை ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல புதிய மற்றும் சரிவர திட்டமிட்ட திட்டங்களை வகுக்கவும், செயல்படுத்தவும் முடிவுசெய்துள்ளது. இதன்படி கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய தபால் துறை
 

இந்திய தபால் துறை

இந்தியாவில் மிகப்பெரிய டெலிவரி நெட்வொர்க் கொண்டுள்ளது இந்தியா தபால் துறை தான். பொதுவாக தபால் துறை கடிதம், பார்சல் மற்றும் மனி ஆர்டர்களை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் ஈகாமர்ஸ் நிறுவனத்திற்காக இந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்காக பணத்தையும் பெற்று வருகிறது.

விற்பனை

விற்பனை

இந்திய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் வாங்கப்படும் பொருட்களில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை கேஷ் ஆன் டெலிவரி தான். மீதமுள்ளவை கிரேடிட் கார்டு அல்லது வங்கி மின்னணு பரிமாற்றம் தான்.

பிணைப்பு

பிணைப்பு

மேலும் இத்தறை வர்த்தகத்தை வரிவாக்கம் செய்யவும் மேம்படுத்தவும், இந்திய தபால் துறை வங்கியியல் சேவை, பணப்பரிமாற்றம் மற்றும் சில முக்கிய சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளது.

வர்த்தகம்

வர்த்தகம்

இத்துறை வர்த்தகத்தில் இந்திய தபால் துறை 2021ஆம் ஆண்டுக்குள் சுமார் 9 பில்லியன் டாலர் அளவு வர்த்தகத்தை பெருக்கும் என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

வங்கி சேவை

வங்கி சேவை

மேலும் தபால் துறை இந்தியாவில் முழுமையான வங்கிச் சேவையை அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது இதற்கான இறுதிகட்ட பணிகளும் இத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Post collects over Rs 280 crore via cash-on-delivery, courtesy Flipkart, Amazon

Within a year of joining the e-commerce bandwagon as a distribution channel, government entity India Post has transacted business worth Rs 280 crore in the cash-on-delivery (CoD) segment alone for firms like Flipkart, Snapdeal and Amazon.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X