நோக்கியாவின் கெட்ட நேரம் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கும் தொற்றிக் கொண்டது...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நோக்கியா நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை 2 பில்லியன் டாலருக்கு வாங்க திட்டமிட்ட பாக்ஸ்கான் நிறுவனம் சில நாட்களில் இந்நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

பாக்ஸ்கான் தைவான் நிறுவனமான இருந்தாலும், இந்நிறுவனம் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஒரு கிளை சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையிலும் உள்ளது. இத்தொழிற்சாலையில் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பாக்ஸ்கான் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

நோக்கியாவின் தாக்கம்...

நோக்கியாவின் தாக்கம்...

பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்த நோக்கியா இந்தியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் உற்பத்திக்காக வந்த ஆடர்கள் குறைந்தன் மூலம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி முதல் உற்பத்தி பணிகளை நிறுத்துவதாக பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.

1,700 பணியாளர்கள்

1,700 பணியாளர்கள்

பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மட்டும் சுமார் 1,700 பணியாளர்கள் பணியாற்றி வகுகின்றனர். இவர்களின் நிலை நோக்கிய நிறுவன பணியாளர்களை போல் ஆகிவிடுமோ என கேள்வி பலருக்கும் தற்போது எழுந்துள்ளது.

வி.ஆர்.எஸ்
 

வி.ஆர்.எஸ்

நோக்கியா நிறுவனத்தின் ஆடர்கள் முழுமையாக குறைந்தால், இந்நிறுவனத்தின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் பல பணியாளர்களுக்கு வி.ஆர்.எஸ் அளித்துள்ளது. இதே முறையை தான் நோக்கிய நிறுவனமும் கையாண்டது.

நிறுவனத்தின் பதில்

நிறுவனத்தின் பதில்

பாக்ஸ்கான் இந்தியா நிர்வாகம் இதுபற்றி கூறுகையில்,"டிசம்பர் 24ஆம் தேதி முதல் நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் முடக்க திட்டமிட்டுள்ளோம், மேலும் நிறுவன கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் இயந்திரங்களை மாற்றி அமைக்கும் பணியில் நிறுவனம இறங்கியுள்ளது." என தெரிவித்துள்ளது.

பணியாளர்களின் சந்தேகம்

பணியாளர்களின் சந்தேகம்

நிறுவனத்தை மாற்றி அமைக்கப்படும் பணியில் ஈடுப்பட்டுள்ள நிறுவனம் பணியாளர்களுக்கு ஏன் திடீரென வி.ஆர்.எஸ் வழங்க வேண்டும் என்ற சந்தேகம் பணியாளர்களின் மத்தியில் உத்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After Nokia, Foxconn comes to a halt

Taiwanese firm Foxconn, which made mobile phone panels for Nokia, has announced that it will be suspending its operations at its Sriperumbudur plant near here from December 24. Around 1,700 employees will be affected by this move.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X