"பழையன கழிதலும் புதியன புகுதலும்" இது தான் டிசிஎஸ் பார்முலா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் உள்ள திறமையற்ற பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளதாக மனித வளத்துறையின் குளோபல் ஹெட் மற்றும் நிறுவனத்தின் துணைத் தலைவரான அஜோய் முகர்ஜி தெவித்தார்.

 

இந்நிலையில் நேற்று டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தில் புதிதாக 55,000 பணியாளர்களை இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

மேலும் இது ஸ்பெஷல் ஆட்சேர்ப்பு இல்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் இது போல பணியாளர்களை இணைக்கப்படுவது இயல்பு என தெரிவித்துள்ளது இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவு.

2015ஆம் நிதியாண்டின் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை தேவைக்கு ஏற்ற உயர்வும் குறையவும் கூடும் என்றும், இந்த 55,000 எண்ணிக்கையில் 35,000 பணியாட்களை கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூவில் இருந்து தேர்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது இப்பிரிவு.

பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 1.49 சதவீதம் குறைந்து 2,455.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

On track to exceed 55,000 hiring target this fiscal: TCS

TCS, on Friday, said it was undertaking a performance-based workforce restructuring, but it was not a ‘retrenchment' exercise and the company might exceed its target of hiring 55,000 new professionals this fiscal.
Story first published: Saturday, December 13, 2014, 14:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X