ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தொடர்ந்து கோஏர் சிக்கியது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதிநெருக்கடி பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திக்கித் திணரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு பிறகு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கையில் கோஏர் சிக்கியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான Airports Authority of India கோஏர் நிறுவனத்தின் நிலுவைத் தொகை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கோஏர் நிறுவனத்தின் நிலுவை தொகை அடுத்த வாரத்துடன், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கு அளித்த வங்கி உத்திரவாதத்தை காட்டிலும் அதிகரிப்பதால், நிலுவை தொகையை உடனடியாக செலுத்தும் படி இந்நிறுவனத்திற்கு உத்திரவிட்டுள்ளது ஏர்போர்ட் அத்தாரிட்டி.

ஸ்பைஸ்ஜெட் கதை தான்..

ஸ்பைஸ்ஜெட் கதை தான்..

பணத்தை செலுத்தவில்லை என்றால் இந்நிறுவனத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிலை தான் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிலுவை தொகையை செலுத்த முடியாத காரணத்தினால், கேஷ் அண்ட் கேரி ஆதாவது பணத்தை செலுத்திவிட்டு சேவையை பெரும் வசதியை கையாண்டு வருகிறது.

கோஏர் நிலுவை தொகை..

கோஏர் நிலுவை தொகை..

இந்நிறுவனத்தின் நிலுவை தொகை இன்றைய தேதி முதல் 42 கோடியாகும், ஆனால் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கு அளித்த வங்கி உத்திரவாதம் வெறும் 30 கோடி தான். அதுக்குறித்து இந்நிறுவனம் கூறுகையில், " நிலுவை தொகையை விரைவில் செலுத்திவிடுவோம், இதனால் விமான சேவை சற்றும் பாதிக்காது." என தெரிவித்துள்ளது.

லாபத்தில் கோஏர்

லாபத்தில் கோஏர்

இந்தியாவில் செயல்படும் ஏறத்தாள அனைத்து விமான நிறுவனங்களும் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான், அதன் பேரில் இவை அனைத்தும் நஷ்டத்தில் செயல்படுவை தான். ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிடப்படாமல் இருக்கும் இண்டிக்கோ மற்றும் கோஏர் நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் திளைக்கிறது.

100 கோடி ரூபாய் லாபம்

100 கோடி ரூபாய் லாபம்

2012-13ஆம் நிதியாண்டில் கோஏர் நிறுவனத்தின் லாபம் மட்டும் 100 கோடி ரூபாய். 2013-14ஆம் லாபகரமாகவே உள்ளது என்றும், கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சற்று குறைவு எனவும் தெரிவித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, எரிபொருள் விலை உயர்வு என பல காரணங்களால் இந்நிறுவனத்தின் லாப அளவு குறைந்துள்ளது.

ஏர் இந்தியாவில் நிலை என்ன???

ஏர் இந்தியாவில் நிலை என்ன???

தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இப்படி இருக்கும் போது, ஏர் இந்தியாவின் நிலை என்ன என்பதை பார்த்தால். இந்நிறுவனத்தின் நிலுவை தொகை 2,000 கோடி ரூபாய் (அது வெறும் அசல் மட்டுமே) கிட்டதட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AAI now warns GoAir over rising dues

After SpiceJet, the Airports Authority of India (AAI) has sounded an alarm over budget carrier Go Air's galloping dues. The state-run airport operator has warned GoAir to bring its dues within its bank guarantee amount by next week.
Story first published: Friday, January 2, 2015, 16:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X