2014ஆம் ஆண்டில் இந்திய பங்கு சந்தை 30% வளர்ச்சியை எட்டியது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 2014ஆம் ஆண்டில் 30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டிற்கு பிறகு 2014ஆம் ஆண்டில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது இந்திய பங்கு சந்தை.

 

இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பணவீக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் எடுத்த முயற்சிகள் தான்.

பணவீக்கம்

பணவீக்கம்

நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய பணவீக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து சந்தையில் முதலீடுகள் அதிகரிக்க துவங்கியது.

அன்னிய முதலீட்டாளர்கள்

அன்னிய முதலீட்டாளர்கள்

மேலும் இந்த வளர்ச்சிக்கு அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது, நடப்பு நிதியாண்டில் அதுவரை 16.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடதக்கது. கடந்த 2010ஆம் ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 29.4 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தனர்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் நேரத்தில் ரிசர்வ் வங்கி வட்டி வகிதத்தை குறைக்கலாம் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரதமர் மோடி தலைமையில் இன்சூரன்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் புதிய திட்டங்களை கொண்டு வருவார் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

2015ஆம் ஆண்டில் இந்திய சந்தை
 

2015ஆம் ஆண்டில் இந்திய சந்தை

சென்ட்ரம் ஸ்டாக் புரோக்கி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான சன்தீப் நாயக் கூறுகையில்,"2015ஆம் இந்தியாவிற்கு மிகவும் பிரகாசமாக உள்ளது" என தெரிவித்தார்.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

இன்று மும்பை பங்கு சந்தை குறியீட்டான சென்செக்ஸ் துவக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்தாலும், மதிய வேலையில் சரிவை தழுவியது. இதன் படி 59ய46 சரிந்து தற்போது 27,828.41 புள்ளிகளாக உள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

அதேபோல் நிஃப்டியும் வர்த்தக துவக்கத்தில் 15 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும், மதிய வேலையில் 20 புள்ளிகள் குறைந்து 8,375.70 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Has Best Year Since 2009, Gains Nearly 30%

The Sensex and Nifty gained nearly 30 per cent this year, posting their best gain since 2009 in a year marked by a series of record highs.
Story first published: Monday, January 5, 2015, 15:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X