இன்போசிஸ் காலாண்டு முடிவுகள்: ஊழியர்களுக்கு 100% போனஸ் அறிவிப்பு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் இன்று நடப்பு நிதியாண்டின் முன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டதுள்ளது. இவ்வறிக்கையின் வெளியிட்டு நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்விகளுக்கும் நிதாணமாக பதில் அளித்தார்.

 

மேலும் 2014ஆம் ஆண்டு காலாண்டு முடிவு அறிக்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளடக்கியதாக உள்ளது. இதை பற்றி முழுமையாக இங்கு பார்போம்.

வருவாய்

வருவாய்

மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் 2.6 சதவீதம் அதிகரித்து 2,218 மில்லியன் டாலராக உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் அனைத்து துறைகளும் குறிப்பிடதக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

போனஸ்

போனஸ்

இன்போசிஸ் நிர்வாகம் 2014ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டு முடிவில் பணியாளர்களுக்கு 100 போனஸ் ( variable bonus payout) அளிக்க உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யு.பி. பிரவின் தெரிவித்தார்.

ஐடித்துறை வளர்ச்சி

ஐடித்துறை வளர்ச்சி

மேலும் நேசிய மென்பொருள் மற்றும் சேவை கூட்டமைப்பு நிறுவனம் 2015ஆம் ஆண்டில் இத்துறை 13 முதல் 15 சதவீதம் வரை உயரும் என தெரிவித்துள்ளது.

பணியாளர்கள் வெளியேற்றம்
 

பணியாளர்கள் வெளியேற்றம்

இந்நிறுவனங்களில் அதிகளவிலான பணியாளர்கள் வெளியேற்றம் கொண்ட நிறுவனங்களில் இன்போசிஸ் முதன்மையாக உள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றத்தின் அளவு 20.1 சதவீதமாக இருந்தது, ஆனால் 3வது காலாண்டில் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு

3வது காலாண்டில் இந்நிறுவனத்தில் 13,154 பணியாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதன் மூலம் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31ஆம் தேதியின்படி 169,638 ஆக உள்ளது.

புதிய  வாடிக்கையாளர்கள்

புதிய வாடிக்கையாளர்கள்

2014ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் இந்நிறுவனத்தில் 59 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர், இதுவே 2வது காலாண்டில் இதன் எண்ணிக்கை 49ஆக இருந்தது குறிப்பிடதக்கது.

வளர்ச்சி

வளர்ச்சி

மேலும் இந்நிறுவனம் உலகின் பல பகுதிகளில் அமைந்துள்ள நிலையில் வட அமெரிக்கா பகுதியில் இந்நிறுவனம் 2.1சதவீதம், அதேபோல் ஐரோப்பாவிலும் 2.1 சதவீதம் வளர்ந்துள்ளது. இந்தியாவில் 3 சதவீதத்திற்கு குறைவான வளர்ச்சியே கண்டுள்ளது இன்போசிஸ். ஆனால் மொத்த வருவாயில் 14 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.

துறை வாரியான வளர்ச்சி

துறை வாரியான வளர்ச்சி

இந்நிறுவனத்தின் வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் நிதியியல் சேவையில் 33.1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது அதேபோல் உற்பத்தி துறை சேவையிலும் 1.8 சதவீதம் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

மேலும் பங்குசந்தையில் இந்நிறுவனம் இக்காலாண்டில் 60 அடிப்படை புள்ளிகள் வளர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

வழிகாட்டி நெறிமுறை அறிக்கை

வழிகாட்டி நெறிமுறை அறிக்கை

மேலும் இந்நிறுவனம் தனது காலாண்டு வழிகாட்டி நெறிமுறை அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், வருடாந்தி வழிகாட்டி நெறிமுறை அறிக்கை வெளியிட உள்ளது. இதில் 2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 7-9 சதவீத வளர்ச்சியை அடையும் என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Q3 results: Ten key takeaways

Here are 10 takeaways from the third quarter results of Infosys, which declared its number this afternoon.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X