3 வருட வைப்பு நிதியில் வரி விலக்கு அளிக்க நிதியமைச்சகத்திடம் வேண்டுகோள்!! வங்கித்துறை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வங்கிகளில் 3 ஆண்டுகளுக்கு அதிகமான முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு முற்றிலுமான வரி விலக்கு அளிக்க வங்கித்துறை மத்திய நிதியமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்பேரில் மத்திய அரசு வங்கிகளின் வேண்டுகோளுக்கு இணங்க முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கும் அதிமான முதிர்வு காலம் கொண்ட வைப்புகளுக்கு தான் மத்திய அரசு வரி விலக்கு அளிக்கிறது.

மியூச்சவல் பண்ட் மற்றும் வரியில்லா பத்திரங்கள்

மியூச்சவல் பண்ட் மற்றும் வரியில்லா பத்திரங்கள்

வங்கிகளின் வேண்டுகோளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் வங்கித்துறையில் அதிகப்படியான டெப்பாசிட்கள் பெற உறுதுணையாக இருக்கும். மேலும் இத்திட்டம் அமல்படுத்தினால் வங்கிகளில் அளிக்கப்டும் மியூச்சவல் பண்ட் மற்றும் வரியில்லா பத்திரங்களின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும்.

பட்ஜெட் முந்தைய கூட்டம்

பட்ஜெட் முந்தைய கூட்டம்

மேலும் வங்கி அதிகாரிகள், நிதி நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் பட்ஜெட் முந்தைய கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களிடம் இப்பரிந்துரையின் லாப தன்மையை பற்றியும், இத்திட்டத்தை அமல்படுத்தும் படியும் வலியுறுத்தினர்கள்.

வரி சலுகை

வரி சலுகை

மேலும் இந்திய நிதியமைப்பில் 80சி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரி சலுகை திட்டத்திற்கு ஏற்றப்படி உள்ளது. தற்போது 80சி சட்டத்தின் கீழ் வரி சலுகை பெற பிபிஎஃப் திட்டத்தின் கீழ் 15 வருடம் முதலீடு செய்ய வேண்டும், என்.எஸ்.சி திட்டத்திற்கு 6 வருடம், ELSS திட்டத்திற்கு 3 வருடம், வங்கி வைப்பு நிதிகளுக்கு 5 வருடம், காப்பீட்டு திட்டத்திற்கு 5 வருடம் வரி சலுகை பெற காத்திருக்க வேண்டும். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வங்கித்துறை அதிகாரிகள் நிதியமைச்சகத்தை வேண்டியுள்ளனர்.

1.5 இலட்ச ரூபாய் முதலீடு

1.5 இலட்ச ரூபாய் முதலீடு

அதேபோல் எந்த ஒரு முதலீட்டு திட்டத்திலும் 1.5 இலட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் காத்திருப்பு காலத்திற்கு பின் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 1.5 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்தால் காத்திருப்பு காலத்திற்கு பின்னும் வரி செலுத்த வேண்டும்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3-year bank FDs may get tax exemption

The government may consider the demand of banks to make fixed deposits for three years and more tax-free instead of the five-year lock-in period at present, providing these lenders a level-playing field with mutual funds and tax-free bonds that have been weaning away a large chunk of investors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X