அமெரிக்காவின் கேட்டர்பில்லர் ஷூக்கள்... இனி பாட்டாவின் சில்லறைக் கடைகளில் கிடைக்கும்!

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரபலமான அமெரிக்காவின் கேட்டர்பில்லர் (CAT) ஷூக்களையும், செருப்புகளையும் விற்பதற்காக பாட்டா நிறுவனம் நாடு முழுவதும் சில்லறை விற்பனை மையங்களை அமைக்கவுள்ளது.

இந்த ஷூக்களையும், செருப்புகளையும் டாடா இன்டர்நேஷனல் நிறுவனம், அமெரிக்காவின் வோல்வரின் வேர்ல்ட்வைட் நிறுவனத்திடமிருந்து வாங்கி ஆன்லைன் மூலமாக தற்போது விற்று வருகிறது. இனிமேல் அதை பாட்டா பார்த்துக் கொள்ளும்.

அமெரிக்காவின் கேட்டர்பில்லர் ஷூக்கள்... இனி பாட்டாவின் சில்லறைக் கடைகளில் கிடைக்கும்!

ஹஷ் பப்பிஸ், மெர்ரெல், ஹார்லி டேவிட்சன் உள்பட 16 வகையான செருப்பு மற்றும் ஷூ வகைகளை விற்பனை செய்து வரும் பிரமாண்ட நிறுவனமாகும் வோல்வரின்.. கேட்டர்பில்லர் வகை ஷூக்களையும் இந்த நிறுவனமே உலக அளவில் விற்பனையும், விநியோகமும் செய்து வருகிறது.

இந்தியாவில் கேட்டர்பில்லர் ஷூ மற்றும் செருப்பு விற்பனையை இனிமேல் பாட்டாவே பார்த்துக் கொள்ளும். ஏற்கனவே இது ஹஷ் பப்பிஸ் ஷூ, செருப்புகளையும் வாங்கி விற்று வருகிறது என்பது குறிப்பிடத்த்கது.

முதலில் கேட்டர்பில்லர் ஷூக்களுக்கான ஷோரூம்களை வட இந்தியாவில் திறக்கவுள்ளதாம் பாட்டா. தொடர்ந்து அது படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுமாம்.

என்ன விசேஷம் என்றால் கடந்த 2002ம் ஆண்டு இந்தியாவில் கேட்டர்பில்லர் ஷூக்கள், செருப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வோல்வரின் நிறுவனம் பாட்டாவைக் கண்டு கொள்ளவில்லை. ராயல் ஸ்போர்ட்டிங் ஹவுஸ் என்ற நிறுவனம்தான் இதை அறிமுகப்படுத்தி விற்று வந்தது.

2013ம் ஆண்டு டாடாட இன்டர்நேஷனலுக்கு வோல்வரின் மாறியது. தற்போது பாட்டவிடம் வந்துள்ளது. தற்போது இந்த வகை ஷூக்களும், செருப்புகளும் ஆன்லைன் மூலமாகவே விற்கப்பட்டு வருகின்றன. இனிமேல் அதை சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்கும் வசதி வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bata gears up to start retailing CAT footwear

Footwear and fashion accessory manufacturer Bata may soon start retailing and distributing CAT footwear in India. CAT, a lifestyle brand with a heavy equipment heritage, was earlier being sold and distributed here by Tata International after it formed a JV with Wolverine Worldwide of the US.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X