மொபைல் நெட்வொர்க்கை மாற்றும்பொழுது வங்கி கணக்கு மாற்ற முடியாதா என்ன??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றைய நடைமுறையில் தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத அளவில் வளர்ந்துள்ள நிலையில் மொபைல் நெட்வொர்கை எளிமையாக மாற்றிக்கொள்ளும் போது வங்கிக் கணக்கு மாற்ற முடியாதா?? என கேள்வி எழுப்பியுள்ளார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் எஸ்.எஸ். முத்ரா.

மேலும் அவர் இந்திய வங்கித்துறையில் வங்கி நிறுவனங்கள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றால் நிறுவனங்கள் தினமும் தங்களை புதுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் ("reinvent themselves") எனவும் தெரிவித்துள்ளார்.

கிளவுட் ஃபண்டிங்

கிளவுட் ஃபண்டிங்

இன்று கிளவுட் ஃபண்டிங் (Cloud funding) மற்றும் பி2பி லென்டிங் (P2P Lending) போன்ற வசதிகள் இருந்தால் வங்கிகளின் வேலை என்ன?? உண்மை சொல்ல வேண்டும் என்றால் மக்களுக்கு வங்கிகளின் அவசியம் அறவே தேவைப்படாது. எனவே வங்கி நிறுவனங்கள் டெக்னாலஜியை தாண்டிலும் மக்களுக்கு உதவும் வகையில், புதுமையை வங்கிகளில் கொண்டு வர வேண்டும்.

மொபைல் நெட்வொர்க்

மொபைல் நெட்வொர்க்

எளிமையான ஒன்றை எடுத்துக்கொள்வோம், தற்போது இந்தியாவில் மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது மிகவும் எளிமையாக மாறிவிட்டத்து, ஏன் அதுப்போல் வங்கி கணக்கை மாற்ற முடியாது. இந்த முறையும் அடுத்த சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ வந்துவிடும். இதனால் திறன் வாய்ந்த வங்கிகள் மட்டுமே சந்தையில் நிலைத்திருக்க முடியும்.

 மறுசீரமைப்பு கடன் (restructured loans)

மறுசீரமைப்பு கடன் (restructured loans)

இச்சந்திப்பில் செய்தியாளர்கள் முத்ராவிடம், மறுசீரமைப்பு கடனுக்கான வரைமுறைகள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர், இதுகுறித்து வங்கி அமைப்புகள் ரிசர்வ் வங்கியை அனுகிய உடன் இது குறித்த முடிவுகள் வெளி வரும்.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

ரிசர்வ் வங்கி இரண்டு வருடத்திற்கு பிறகு 0.25 சதவீத ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் நாட்டில் இரு வங்கிகள் மட்டுமே கடன்கான வட்டி வகிதத்தை குறைத்துள்ளது, பிற எந்த ஒரு வங்கியும் வட்டி விகிதத்தை குறைப்பிற்கான அறிவிப்பை அதுநாள் வரை வெளியிடவில்லை.

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவால் இந்தியாவின் 2014ஆம் ஆண்டு செலவீணத்தில் 50 பில்லியன் டாலர் சேமித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If mobile numbers can be ported why not bank a/cs: Mundra

As technological advancements continue to change the world of finance and banking, Reserve Bank Deputy Governor S S Mundra today called upon bankers to "reinvent themselves" if they want to remain relevant.
Story first published: Friday, January 30, 2015, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X