ஆடை விற்பனையில் 1 பில்லியன் டாலர் வர்த்தக்ததை எட்டும் பிளிப்கார்ட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவன தனது பேஷன் பிரிவில் விற்பனை இலக்கான 1 பில்லியன் டாலரை எட்ட உள்ளது. இந்நிறுவனம் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமாக இருந்த மின்திரா நிறுவனத்தை கைபற்றியதில் இருந்து இந்நிறுவனத்தின் ஆடை மற்றும் பேஷன் பொருட்களில் விற்பனை அதிகரித்துள்ளது.

 

மேலும் மின்திரா நிறுவனம் தற்போது இணையதள சேவையில் இருந்து வெளியேறி திட்டமிட்டும், மொபைல் வாடிக்கையாளர்களை அதிகளவில் பெற்றுள்ளது. அதன் மூலம் இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் அதிக மொபைல் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமான மின்திரா கருதப்படுகிறது.

மொபைல் வாடிக்கையாளர்கள்

மொபைல் வாடிக்கையாளர்கள்

மின்திரா நிறுவனம் 1 பில்லியன் டாலர் விற்பனை இலக்கை அடைத்துள்ளதை பற்றி கூறுகையில், நிறுவனத்தில் 80 சதவீத வாடிக்கையாளர்கள் மற்றும் 60 விற்பனை மொபைல் மூலம் பெறப்பட்டு வருகிறது. இதன் மூலம் மொபைல் மென்பொருளில் அதிகம் கவனம் செலுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முகேஷ் பன்சால்

முகேஷ் பன்சால்

பிளிப்கார்ட் நிறுவனம் கைபற்றிய மின்திரா நிறுவனத்தின் தலைவரான முகேஷ் பன்சால் கூறுகையில், ஆன்லைன் சில்லறை விற்பனையில் பிற துறைகளை விட பேஷன் மற்றும் ஆடைவிற்பனையில் அதிகப்படியான வர்த்தகம் நடந்து வருகிறது. இது பிளிப்கார்ட் மட்டும் அல்ல அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

இணைதள சேவை
 

இணைதள சேவை

மேலும் இந்நிறுவனம் இணையதள சேவையில் இருந்கு முற்றிலும் விலகி மொபைல் வர்த்தகத்திற்கு முற்றிலும் இடம்பெயர திட்டமிட்டமிட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் தனது அனைத்து முதலீட்டையும் மொபைல் தளத்தை ஊக்குவிக்கும் பணியிலே முதலீடு செய்து வருகிறது.

பிளிப்கார்ட் - மின்திரா

பிளிப்கார்ட் - மின்திரா

நடப்பு நிதியாண்டில் இந்நிறுவன கூட்டணியில் பேஷன் பொருட்களின் விற்பனை 6000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் நிலையில் உள்ளது. இதில் மின்திரா நிறுவனத்தின் விற்பனை அளவு மட்டும் 2000 கோடியாகும். இந்நிறுவனம் மாதத்திற்கு 300 கோடி ருபாய் வரை விற்பனை செய்து வருகிறது.

செலவுகள்

செலவுகள்

மேலும் இந்நிறுவனங்கள் தங்களது வருவாயில் 20-30 மில்லியன் டாலரை தள்ளுபடி, மார்கெட்டிங், பணியாளர்களின் வாழ்வியல் போன்வற்றில் செலவு செய்து வருகிறது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தை போலவே பன்னாட்டு ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான 2 பில்லியன் டாலர் விற்பனையை எட்டும் நிலையில் உள்ளது. இந்நிறுவனம் தனது வரத்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்தியாவில் மட்டும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Myntra planning to shut down its website by year-end

At a time when fashion sales at Flipkart and Myntra have collectively crossed the billion-dollar mark in run rate, Myntra may look to phase out its web presence completely in a strong testimony to the exponential growth of mobile internet in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X