இந்தியாவில் 6 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், 7 போர்க் கப்பல் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய கடற்படையின் வலிமையை மேம்படுத்த மத்திய அரசு 6 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், 7 போர்க் கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது 30 ஆண்டு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இத்திட்டத்தின் படி இந்திய கடற்படைக்கு 30 வருடத்தில் 24 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கப்படுவது தான். இத்திட்டம் 1999ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது குறிப்பிடதக்கது.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 6 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 7 போர் கப்பல்களை மத்திய அரசு இந்தியாவில் தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை இந்தியா, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிப்பில் ஈடுப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7 போர்க் கப்பல்கள்

7 போர்க் கப்பல்கள்

இந்த 7 போர்க் கப்பல்களில் நான்கு கப்பல்கள் மும்பையில் உள்ள மேசகான் டாக்ஸ் நிறுவனத்திலும், 3 கப்பல்கள் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

இதற்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்
 

ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்

30 ஆண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக P75 திட்டத்தின் படி சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் 6 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்பட்டது.

P75I திட்டம்

P75I திட்டம்

மோடி தலமையிலான அரசு அடுத்த 6 நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க கடந்த வருடம் ஒப்புதல் அளித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இதற்கான அறிக்கைகள் மற்றும் ஆடர்கள் மார்ச் மாதம் வெளிவர உள்ளதாக பாதுகாப்பு துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடுகளை அதிகரித்து போர் விமானம், போர்க்கப்பல், துப்பாக்கி வரை அனைத்தும் இந்தியாவில் உற்பத்தி செய்யது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இத்துறையில் முதலீடு செய்ய இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவில் ஆர்வமுடன் உள்ளனர்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt clears plan for construction of 6 nuclear submarines, 7 frigates

The government has cleared the indigenous construction of seven stealth frigates and six nuclear-powered submarines to bolster naval power.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X